பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decibel

207

decimal



மானச் செய்முறைப்படுத்துதல், மையச் செய்முறைப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.

decibel: டெசிபல் : ஒரு குறியீட்டின் குரல் முனைப்பினை அல்லது வலிமையினை அளவிடும் அலகு. மனிதர்கள் 10 டிபி முதல் 140 டிபி வரையிலான குரல் முனைப்பினைக் கேட்க முடிகிறது. சந்தடி மிகுந்த ஒரு தொழிற்சாலையில் 90 டிபி ஓசை எழுகிறது. இடிமுழக்கத்தில் 110 டிபி ஓசை உண்டாகிறது. 120 டிபி அளவுக்கு மேற்பட்ட ஒசையினால் காதுவலி உண்டாகும்.

decimal : பதின்மம்; தசமம்; பதின் மானம் : பதின்மக் குறிமானத்தில் பயன்படுத்தப்படும் 0 முதல் 9 வரையிலான இலக்கம். பதின்மக் குறிமானத்தைக் (ஆதாரம் 10) கையாளும்போது, '0' முதல் 9 வரையிலான (பத்துக்கு ஒன்று குறைவு) இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று '6 -ஐ ஆதாரமாகக் கொண்ட குறிமானத்தில் '0' முதல் '5' முதல் வரையிலான (ஆறைவிட ஒன்று குறைந்த) எண்களையும், ஈரிலக்கக் குறிமானத்தில் (ஆதாரம்1) 0 முதல் 1 வரை மட்டும் பயன்படுத்துகிறோம்.

decimal numbering : பதின்ம இலக்கமிடல் : எண்ணுவதற்கு அடிப்படையாக ஒரு 10 இலக்கச் சுழற்சியைப் பயன்படுத்துகிற எண்மானமுறை. இதில் பயன்படுத்தப்படும் இலக்கங்கள் 0 1 2 3 4 5 6 7 8 9.

decimal code : பதின்மக் குறியீடு ; தசமக் குறியீடு : தனியாக வேறொரு எண்முறைமையில் பதின்ம எண்களைக் குறிப்பிடும் முறை.

decimal digit: பதின்ம இலக்கம்; தசம இலக்கம்: பதின்ம எண்முறைமையில் உள்ள ஒரு எண். பதின்மமுறை யின் அடிப்படை எண் 10, கீழ்க் காணும் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. 0,1,2,3,4,5,6,7,8 மற்றும் 9.

decimal number: பதின்ம எண்; தசம எண் : பொதுவாக ஒற்றை இலக்கத்துக்கு மேற்பட்ட எண், அதன் அளவு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்களால் குறிக்கப்படுகிறது.

decimal point: பதின்மப் புள்ளி; தசமப் புள்ளி: பதின்மப்புள்ளி என்பது எண்ணும் பதின்ம எண்களும் கலந்த ஒன்றில் முழு எண்களை பதின்ம எண்களிலிருந்து பிரிக்கிறது. 741.12 என்ற பதின்ம எண்ணில் உள்ள பதின்மப் புள்ளி741-ஐயும் 12-ஐயும் பிரிக்கிறது.

decimal system: பதின்ம முறை; தசம முறை : அடிப்படை 10 எனக் கொள்ளும் எண் முறைமையாகும்.

decimal to binary conversion : பதின்ம-இருமமுறை-மாற்றம்; பதின்ம முறைமையிலிருந்து இரட்டைஇலக்க எண்களாக மாற்றுதல்: பதின்ம முறை மையில் எழுதப்பட்ட எண்களை இருமமுறைக்குச் சமமான எண்களாக மாற்றுதல்.

4410 = 1 x 25 + 0 x 24 + 1 x 23 + 1 x 22 + 0 x 21 + 020 = 1011002

decimal to hexadecimal conversion : பதின்மமுறையிலிருந்துபதினாறெண் முறைக்கு மாற்றுதல்: 10-ஐ அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு எண்ணை 16-ஐ அடிப்படையாகக் கொண்ட எண் முறைமையில் எழுதுதல்.

decimal to octal conversion : பதின்ம-எண்ம முறை மாற்றம்; பதின்ம முறையிலிருந்து எட்டை அடிப்படையாகக் கொண்ட முறைக்கு மாற்றுதல் : பத்தை அடிப்படையாகக் கொண்ட