பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரு மணவை முஸ்தபா அவர்கள் சுமார் 12 ஆயிரம் கணிப்பொறி சார்ந்த ஆங்கிலச் சொற்களை தமிழாக்கம் செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய பெரும் முயற்சி. இச்சொற்களைத் தமிழாக்கம் செய்ததுடன் மட்டுமன்றி அவற்றின் பொருளை உணரும் வகையில் அழகிய சுருக்கமான விளக்கத்தையும் அளித்திருப்பது இச்சொற்களைப் பயன்படுத்த முனைவோருக்கு அரிய துணையாக அமையும்.

திரு மணவை முஸ்தபா அவர்கள் இதுவரை பல்வேறு அறிவியல் துறைகள் சார்ந்த 5 களஞ்சிய அகராதிகளை உருவாக்கியுள்ளார். அவரது தனிப்பட்ட ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் பெருமுயற்சியாலும் பல்துறை அறிஞர். களுடனான தொடர்பாலும் அவர் நிகழ்த்தியுள்ள இச்சாதனை அவரால் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. கணினி சார்ந்த பல தமிழ் நூல்கள், பயிற்சிக் கையேடுகள் போன்றவை உருவாக இருக்கும் இக்கால கட்டத்தில் இந்தக் “கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி” பேருதவியாக வெளிவந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் கணினி அறிவு கிட்டியிருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முயற்சி வெற்றி காண இந்த அகராதி பெரிதும் உதவும். இந்த அரிய நூலை நமக்குத் தந்த திரு மணவை முஸ்தபா அவர்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுகள்

சென்னை - 5 27- 10 - 1999

மு. ஆனந்தகிருஷ்ணன் துணைத் தலைவர் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம்

22