பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயணம் மேற்கொண்டபோது அப்பயணத்தை கணினி கலைச்சொல் களஞ்சியத்தை செம்மையாக உருவாக்கும் பணிக்காகவே அப்பயணத்தின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டார்.

திரு மணவையாரின் கலைச்சொல் களஞ்சியங்கள் அனைத்திலும் ஒரு சிறப்புக் கூறு உண்டு. அகர வரிசையில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தரும்போது அது 'அகராதி ஆகிறது. அத்தோடு நில்லாமல், உடன் சொல்விளக்கத்தையும் பொருள் விளக்கத்தையும் விரிவாகத் தருவதால் அது கலைக்களஞ்சியமாகப் பரிணமிக்கிறது. ஆங்காங்கே தேவையான இடங்களில் படங்களும் இடம் பெற்றிருப்பது இன்னொரு சிறப்புக் கூறாகும்.

வயதில் சிறியவனாக இருந்தபோதிலும், தொலைத் தொடர்புத் துறையில் என்னுடைய இருபத்தைந்து ஆண்டு காலப் பணியையும், கணினித் துறையில் பன்னிரண்டு ஆண்டு கால பட்டறிவையும், கணியத்தமிழ் எழுத்துத் துறையில் ஆறாண்டு காலப் பயிற்சியையும், கணினித் துறை ஆசிரியராக ஐந்தாண்டு காலச் சேவையையும் கருத்தில் கொண்டு, என்னை அழைத்து, இந்தக் கணினிக் கலைச் சொல் களஞ்சிய அகராதியை ஆய்வு செய்யும் பணியை மதிப்பிற்குரிய அறிஞர் பெருந்தகை திரு மணவையார் அவர்கள் ஒப்படைத்தபோது நான் பூரித்துப் போனேன். பெருமகிழ்ச்சியுடன் அப்பணியை ஏற்றுக் கொண்டேன்.

இந்தக் கலைச் சொல் களஞ்சியத்தை முதல் சொல்லி லிருந்து கடைசிச் சொல்வரை ஒவ்வொரு சொல்லையும் அதன் விளக்கங்களோடு ஆழ்ந்து படித்தேன். இந்நூலில் நான் கண்ட சில பொதுவான சொல்லாக்கக் கோட்பாடுகளையும், குறிப்பான சில சிறப்புக் கூறுகளையும் இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

மொழியாக்கக் கோட்பாடுகள்

  • ஒர் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான பல்வேறு தமிழ்ச் சொற்களைத் தருதல்.

Data தகவல், தரவு, விவரம், செய்திக் குறிப்பு.

Key - விசை, திறவு, விரற்கட்டை, குமிழ், சாவி. 

Pixel - படக்கூறு, படப்புள்ளி, படத்துணுக்கு. இதைப் பற்றி திரு மணவையார் கூறும்போது, 'புதிய அறிவியல் துறைக்கு முதன் முதலாகக் கலைச் சொல்லாக்கம் செய்யும்போது, இதுபோல ஒத்த சொற்கள் பலவற்றைத்

34