பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

industrial rob

எந்திரன்கள் பல்வேறு வகையான பணிகளைச் செய்யும்படி ஆணைத் தொகுப்பை அளிக்கலாம். அதன் மூலம் அவற்றை இலகுவான தயாரிப்பு கருவிகளாக மாற்றலாம். ரோபோக்களுக்கான ஆணைத் தொகுப்புகளை மாற்ற முடியுமாத லால் பல சாதகமான பயன்கள் உண்டு. மிகக் குறைந்த துவக்கச் செலவு மற்றும், குறைந்த மாசு நீக்கும் செலவுகள் காரணமாக எண் பிக்கப்பட்ட வடிவமைப்பும், ஒட்டு மொத்த தயாரிப்புச் செலவைக் குறைக்கும் பண்பையும் எந்திரன் கொண்டிருப்பதால் ஒரு நிறுவனம் அதன் லாபத்தை அதிகரித்துக் கொள்ள முடிகிறது. மோட்டார் வாகனத் தொழில், விமானத் தொழில், வீட்டு உபயோக மின் அணுவியல் சாதனத் தயாரிப்பு, நுகர்வுப் பொருள்கள், சாலையில் செல்லாத வாகனங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் பெரிய தொழில் நிறுவனங்கள் தொழில் துறை எந்திரன்களைப் பயன்படுத்து கின்றன. அண்மைக்கால வளர்ச்சி காரணமாக எந்திரன்கள் கூடுதல் அறிவுடன் இயங்குகின்றன. எந்திரப் பார்வை, தொடு உணர்வு, நகரும் திறன் காரணமாக பல வகை யான தொழில்களுக்கு ரோபோக்கள் பொருத்தமானவை. ஜவுளித் தொழில், உணவு பதப்படுத்துதல், மருந்துப் பொருள்தயாரிப்பு, மேஜை நாற்காலி வகைகள் தயாரிப்பு, கட்டு மானத் தொழில், சுகாதாரப் பரா மரிப்பு ஆகியவற்றில் மிக விரைவில் எந்திரன்கள் பெருமளவு பயன்படுத் தப்படும். உற்பத்தி, உற்பத்தித் திறன் தொகுப்புகளில் எந்திரன்கள் பெரு மளவு லாபம் தருவனவாக உள்ளன. அமெரிக்காவில் தொழில் நிறுவனங் களில் எந்திரன்களைப் பயன்படுத்து

Inference

வதால் 20 முதல் 30 சதவீதம் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது என்பதை அமெரிக்க வரலாறு காட்டு கிறது. எந்திரன்களைப் பயன்படுத் தும் நிறுவனங்கள்.தற்பொழுது பயன் படுத்தப்படும் எந்திரங்களுக்கான நிலுவையைச் செலுத்துவதைத் துரிதப்படுத்த இயலும். அதே சமயம் எந்திர முதலீட்டுத் தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக கூடுதலாக அழுத்த அச்சு எந்திரங்களையும் அல்லது எந்திரக் கருவிகளையும் வாங்குவதை விட எந்திரன்களை வாங்குவது 20 முதல் 30 சதவீத கூடுதல் உற்பத்தி தருவதாக உள்ளது. சமமான செலவில் அல்லது கூடுத லான செலவில் குறைவான உற்பத் தித் திறன் உள்ள ஒரு எந்திரத்தை வாங்குவதை விட எந்திரன் களை வாங்குவதால் 20 முதல் 30 சதவீதம் உற்பத்தி திறன் உயர்கிறது. Inequality : &loubleiscold : &ldub இல்லாத இரண்டு மதிப்பீடுகளின் வெளிப்பாடு. 'பி' யை விட 'ஏ' பெரி யது, 'ஏ'யைவிட 'பி' பெரியது என்று கூறும் சமமின்மையை வெளிப்படுத் தும் இரண்டு வழிகளாகும். ஏ.-க்கு பி-சமம் இல்லை என்பது சம மின்மையின் வரிசை முறையை வெளிப்படுத்தாது சமமின்மையை மட்டும் காட்டுகிறது.

Inference : முடிவறிதல்; உய்த்துணர் தல்; அனுமானம் : அறிந்த உண்மை மதிப்பீடுகளையுடையதுவக்கநிலை அலகுகளில் இருந்து முடிவு ஒன்றைப் பெறும் முறை. inference programme : eelgoudmos ஆணைத்தொகுப்பு ; தரப்பட்ட உண்மைகளிலிருந்துமுடிவு ஒன்றைப் பெறும் ஆணைத் தொகுப்பு.