பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jack

Jack : முளை : ஒரு கம்பி அல்லது மின்சுற்றின் கம்பிகள் இணைக்கப் பட்டுள்ள இணைக்கும் சாதனம். "ஃபிளக்' பொருத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டது. சாக்கெட் என்றும் அழைக்கப்படுகிறது. Jacquard loom: Gagā (56 sist Sisälsä தறி : 19ஆம் நூற்றாண்டு நெசவுத் தொழிலையே மாற்றிய தானியங்கி நெசவு எந்திரம். எதிர் கால கணக் கீட்டுப் பட்டியலிடும் எந்திரங் களுக்கு வழிகாட்டி. ஃபிரெஞ்சுக்கார ரான பட்டு நெசவு செய்யும் ஜோசப் மேரி ஜேக்வார்டு (1752 - 1834) உருவாக்கிய இப்பொறிதுளையிட்ட அட்டைகளைப் பயன்படுத்தி இயக் கங்களைக் கட்டுப்படுத்துகிறது. ஏற் கனவே இது புழக்கத்தில் இருந்தா லும், உடனடியாக சிக்கலான வடி வமைப்புகளை உருவாக்க ஜேக்கு வார்டின் விசைத்தறி மிகவும் உதவி யாக உள்ளது.

Jacket ; உறை : நெகிழ்வட்டை (டிஸ்கெட்) வைத்துக் கொள்ளும் உறுதியான காகித உறை. Jacquard Joseph Marrie : ஜேக்கு வார்ட் ஜோசப் மேரி: ஜேக்குவார்ட் லூம்' என்னும் நெசவு எந்திரத்தை உருவாக்கியவர். நெய்யப்படும் வடி வங்களை தானாகக் கட்டுப்படுத்த துளையிட்ட அட்டைகளின் வரிசை இதில் முதன் முறையாகப் பயன் படுத்தப்பட்டது. Jaggies , பிசிறுகள் : கணினி வரை கலை காட்சித் திரையில் படிகளா கவோ அல்லது வட்டங்கள், வளைவு களில் வாள் பல்லாகவோ இருப்பது. Jargon : குழுஉச் சொல்:ஒரு துறை யில் பணியாற்றுபவர்கள் அத்துறை யில் உள்ள பொருள்கள் /வேலை

382

Jitter

களை விவரிக்கப் பயன்படுத்தும் சொற்கள். மற்றவர்களுக்குப் புரி யாது. Java : ஜாவா : சி ++ மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய கணினி மொழி. சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜாஸ்லிங் என்பவர் உருவாக்கியது. எந்தக் கணினியிலும் எந்த பணித் தளத்திலும் இயங்க வல்லது. இணை யப் பயன்பாடுகளுக்கு ஏற்றது. பிற கணினி அமைப்புகளுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் இயக்கங் களைச் செய்யக் கூடிய வகையில் கட்டுப்படுத்துவதால் இதை 'பாது காப்பான மொழி' என்று கூறலாம். Javelin Plus : 22 61666it Merteio: இன்ஃபர்மேஷன் ரிசோர்சஸ் நிறுவனம் உருவாக்கிய பிசி விரிதாள் ஆணைத்தொடர் வரிசை, பத்தி எண்களுக்குப் பதிலாக பெயர் களைப் பயன்படுத்தி அறைகளை அடையாளம் காணவும், தகவல் களைத் தொகுக்கவும் செய்கிறது. JCL: Gegå6160: Job Control Language என்பதன் குறும் பெயர். JES : Ĝgg@sTsio: Job Entry System என்பதன் குறும்பெயர். செய்து முடிப்பதற்காக வேலைகளையும் பட்டியல்களையும், ஏற்றுக் கொள் ளும் இயக்க அமைப்பில் ஒரு பங்கு. Jet set willy : ஜெட் செட் வில்லி: ஸ்பெக்ட்ரம் ஹோம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தக்கூடிய ஒரு மென் பொருள் விளையாட்டு. Jitter:தடுமாற்றம்: ஒரு சமிக்ஞையில் சிறு நிலையற்ற தன்மை. ஒளிக் (வீடியோ) காட்சித் திரையில் வரும் சமிக்ஞைகளுக்கு இஃது குறிப்பாக சொல்லப்படுகிறது.