பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Client - வாடிக்கையாளர் முறைமை ஆய்வுக்காக (System analysis) ஒப்பந்தம் செய்யப்படும் தனிநபர் அல்லது ஒரு நிறுவனம்..

  • நிறுவனப் பெயர்கள், மென்பொருள் தொகுப்புகளின்

பெயர்கள், விற்பனைப் பொருள்களின் பெயர்கள், அளவீடுகள் மற்றும் பல சிறப்புப் பெயர்களை மொழிபெயர்க்காமல் அப்படியே ஒலிபெயர்ப்பாகத் தருகிறார்.

Modula - 2 - மாடுலா 2

MacPaint - மாக்பெயின்ட்

Fairchild - ஃபேர்சைல்ட்

Javlin Plus - ஜேவ்லின் பிளஸ்

Easy Writer - ஈஸி ரைட்டர்

Gauss - காஸ்

Hentry - ஹென்றி

Hertz - ஹெர்ட்ஸ்

இவ்வாறு மொழியாக்கத்தில் தனக்கென சில கோட்பாடுகளை வகுத்துக் கொண்டு அவற்றின் அடிப்படையில் இக்கலைச் சொல் களஞ்சிய அகராதியை உருவாக்கியுள்ளார். இவை தவிர இந்நூல் முழுவதும், ஆங்காங்கே விரவிக் கிடக்கும் சிறப்புக்கூறுகளையும், சிறப்பு உத்திகளையும் சுட்டிக்காட்டுவது என் கடமையாகும்.

மொழியாக்கச் சிறப்புக் கூறுகள்

அகரவரிசையில் சொற்களின் பொருளைக் கூறும் நூலை 'அகராதி' என்கிறோம். ஒவ்வொரு சொல்லின் விளக்கத்தையும் விரிவாகத் தரும்போது 'கலைச்சொல் களஞ்சியம்' என்கிறோம். சொல்லின் பொருள், விளக்கம் இவற்றோடு நில்லாமல் சில எடுத்துக்காட்டுகளையும் கூறி விளக்குவதை என்னவென்பது? ஒரு பாட நூலைப் படிப்படி போன்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, Hexadecimal Notation என்பதை பதினாறிலக்கக் குறிமானம் என்று பொருள்கூறி, இதில் 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் A,B,C,D,E,F என்ற எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுவிட்டு, A60B என்ற ஹெக்ஸா எண்ணை 42507 என்ற டெசிமல் எண்ணாக மாற்றும் முறையையும் விளக்கியுள்ளார். அதே போல் Factorial என்ற சொல்லை விளக்கும்போது 4- ன் மதிப்பைக் கண்டறிவது எப்படி எனவும் விளக்கப்பட்டுள்ளது.

37