பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Mauchly

இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்றும் மின்னணுவியல் தொடர்பான சோதனைகளை மக்லீ துவக்கினார். பள்ளியில் எட்டாண்டுகள் இருந்த காலத்தில் பருவ நிலை ஆய்வுத் திட்டம் ஒன்றில் அவர் பணியாற்றி னார். சிக்கலான சுற்றுச்சூழல் தொடர்பான கணக்குகளைச் செய்ய விரைவாகச் செயல்படக்கூடிய மின்னணுவியல் கருவி ஒன்று அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். 1941இல் அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள மின் பொறியியல் பள்ளியில் சேர்ந்தார். அங்கு 1943ஆம் ஆண்டின் துவக்கத் தில் ஜே. பிரெஸ்பெர்ஈக்கெர்ட்டைச் சந்தித்தார். இருவரும் சேர்ந்து இராணுவ ஆயுதப்படைப் பிரிவுக்கு மின்னணுவியல் கணினி ஒன்றைத் தயாரிப்பதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இராணுவத்தின் ஆயுதப் படைப் பிரிவு அவருக்கு அந்த எந்திரத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது. இராணு வத்துக்கு இரண்டாவது உலகப் போருக்காக புதிதாக உருவாக்கப் பட்ட பீரங்கிகளின் இலக்குகளை நிர்ணயிப்பதற்கான கணிதப் பட்டி யல்களைத் தயாரிக்க வேண்டியிருந் தது. இத்தகைய பட்டியல்களை மூர் பள்ளி ஏற்கனவே பயன்படுத்தி வந்த து. 1943-க்கும் 1946-க்கும் இடைப் பட்ட காலத்தில் இவை மிகவும் மெதுவாக இயங்கின. ஈக்கெர்ட்டும், மக்லீயும் மின்னணுவியல் எண் ஒருங் கிணைப்பி மற்றும் கணினி ஒன்றை உருவாக்கினார்கள். எதிர்காலத்தில் பல கணினி வடிவமைப்புகளை உரு வாக்குவதற்கான முன்னோடியாக இது அமைந்தது. ஈனியாக் உண்மை யிலேயே ஒரு பெரிய ராட்சதன் ஆகும். அது 18 ஆயிரத்துக்கும்

438

McCarthy

மேற்பட்ட வெற்றிடக் குழாய்களைக் கொண்டது. அதன் எடை30 டன்கள். அது மூன்று படுக்கையறைகளைக் கொண்ட ஒரு வீட்டின் பரப்பளவைக் கொண்ட அறையில் அமைக்கப்பட் டிருந்தது. ஈனியாக் உருவானதைத் தொடர்ந்து ஈக்கெர்ட்டும் மக்கிலீயும் தங்கள் சொந்தக் கம்பெனியை நிறுவினார்கள். அவர்கள் பினாக் என்ற பெயரில் தங்கள் இரும எண் தானியங்கிக் கணினியை அமைத்தார் கள். அது சோதனை முயற்சியாக அமைந்தது. பொது நோக்கங்களுக் கான உலகின் முதலாவது வணிகக் கணினி யுனிவாக், அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கழகத்தில் நிறுவப்பட்டது. ஈக்கெர்ட்டும் மக்லீயும் துவக்கிய நிறுவனம் இப்பொழுது ஸ்பெரி கார்ப்பரேஷனின் ஒரு அங்கமாக உள்ளது. இந்நிறுவனம் உலகின் மிகப் பெரிய கணினி சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது.

maximinicomputer : Qluflu / குறுங் கணினி : 16துணுக்குச் சொற்களைப் பயன்படுத்தும் பெரிய குறுங் 356Nofiaaf. Minimini computer, Midimini computer and Supermini computer ஆகியவற்றுக்கு எதிரானது. mb: எம்பி:Megabyte என்பதன் குறும் பெயர்.

MCC : Gilbélé. : Microelectronics and Computer Technology Corporation என்பதன் குறும்பெயர். மிக நவீன கணினி குறித்து ஆய்வு நடத்த 13 நிறுவனங்கள் இணைந்து உருவாக் கிய ஒரு அமெரிக்கக் கூட்டமைப்பு.

McCarthy, John : Quoéâmit53 gneis : LSP ஆணைத் தொகுப்பு மொழியை 1958இல் உருவாக்கியவர். மேலும் எதிர்வினைக் கணினி எனும் கருது