பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

accounting 46 ACM

செய்து, நிதி அறிக்கைகளை அளிக் கும் தகவல் அமைப்பு. திட்டமிடல், வணிக இயக்கங்கள் மற்றும் சட்ட முறையான, வரலாற்று பதிவுகளை வைத்திருப்பதற்கும் தேவையான தகவலை இது வழங்குகிறது.

accounting machine : கணக்குப் பொறி : துளையிட்ட அட்டைகளை யோ காந்தப்பட்டித் தகடுகளையோ பயன்படுத்தி விலைப் பட்டியல்கள் தயாரித்து, கணிப்புகளைச் செய்யும் தொடக்க கால அலுவலக எந்திரங் கள்.

accounting systems : கணக்கிடும் அமைப்புகள் : நிதி சார்ந்த தகவல் களை அளவிட, விளக்க, ஆராய மற் றும் பரப்ப முடிவெடுப்பவர்களை அனுமதிக்கும் கணினி அமைப்புகள்.

accumulator : தொகுப்பி; திரட்டகம் : தொடர் கணக்கீடு அல்லது நடவடிக் கைகளின் போது சேமிப்பிடமாகப் பயன்படும் பதிவு . இங்கு கணக்கு அல்லது தருக்கச் செயல் முறையின் விளைவுகள் தற்காலிகமாகச் சேமிக் கப்படுகின்றன.

accuracy : துல்லியம்.

accurate : துல்லியமான.

ACD : ஏசிடி : Automatic Call Distributor என்பதன் சுருக்கம். வரிசைமுறை அமைப்பில் பயன்படுவது.

ACF : ஏசிஎஃப் : Advanced Communi cation Facility என்பதன் சுருக்கம்.

ACH : ஏசிஎச் : Association for Compu ters and the Humanities என்ப தன் குறும் பெயர். மொழி, இலக்கியம், வரலாறு, மானிடவியல், சமூக வியல் இவற்றில் கணினி ஆய்வு களையும் மற்றும் கலை, இசை, நடனம் ஆகியவற்றைப் படைக்க வும் கற்கவும் கணினியைப் பயன் படுத்துபவரை ஊக்குவிக்கும் பன்னாட்டுச் சங்கம்.

ACI : ஏசிஐ : Automatic Car Identifi cation என்பதன் குறும் பெயர். தானியக்க முறையில் ரயில் பெட்டி களை அறிதலைக் குறிக்கும். இரயில் பாதை நிறுவனங்கள் இரயில் பெட்டி களை அறிவதற்குப் பயன்படுத்தும் தானியக்க முறை.

ACIA : ஏசிஐஏ : Asynchronous Commu nications interface Adapter என்ப தன் குறும் பெயர். செய்தித் தகவல் தொடர்பு இடை முகங்களில் பயன் படுத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்றுச்சிப்பு.

ACK : ஏசிகே; ஏற்பு அறிவிப்பு : Acknowledge என்பதன் குறும் பெயர். தகவல் தொகுப்பு ஒன்று சரியாகப் பெறப்பட்டுள்ளது என்பதை, அதனை அனுப்பிய முனையத்துக்கு, பெற்ற முனையம் திருப்பி அனுப்பு வது. இதற்கு எதிர்மறையான குறும் பெயர் என்ஏகே (NAK).

acknowledge : ஒப்பு; ஏற்பு: ஒரு பணி முடிந்து விட்டது என்பதையும், அடுத்த பணிக்கு வன்பொருள் தயார் என்பதையும் குறிப்பிடும் உள்ளீடு/ வெளியீடு சமிக்ஞை .

acknowledge character : ஒப்பு எழுத்து : அனுப்பப்பட்ட தகவல் சரியாகப் பெறப்பட்டது என்பதைக் குறிப்பிடும் தகவல் தொடர்பு கட்டுப் பாட்டு எழுத்து.

acknowledgement : ஒப்பம் : தகவல் பெறும் சாதனத்திலிருந்து அனுப்பும் சாதனத்திற்கு ஒப்ப எழுத்தை அனுப்புதல்.

ACM : ஏசிஎம்:கணினி எந்திரங்களுக் கான சங்கம் : Association for computing Machinery என்பதன் குறும் பெயர்.