பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

action sta 47 actuate

அசாதாரண சூழ்நிலைகள் குறித்து நிர்வாகத்தினை விழிப்படையச் செய்யும் ஒரு சிறப்புக் குறிப்புரை.

action statement : செயல் அறிக்கை : சில செயல்களை மேற் கொள்ளும் படி கணினிக்குத் தரப்படும் அறிக்கை .

action stub : செயலிடம்.

activation : இயக்கல் : ஒரு செயல் முறையை இயங்கச் செய்தல்.

activation record : இயக்கப் பதிவு : இயங்க வைத்தல் தொடர்பான தகவலைக் கொண்ட உள்ளமைப்பு தகவல் அமைப்பு முறை.

activation stack : இயக்க இருப்பு : நிகழ்வு இயக்கி உட்பட அனைத்து இயக்கிகளுக்குமான ஒரு உட்பகுதி தகவல் அமைப்பு.

active cell : செயற்படுய சிற்றிடம்; இயங்கு கலன் : மின்னணுவ பல் விரி தாளில், தளப் பரப்பில் சுட்டியினால் உணர்த்தப்படும் கட்டம்.

active data dictionary : இயங்கும் தகவல் அகராதி : ஒரு நிறுவனத்தின் தகவல் தளத்தை அணுகுவதற்கு டிபிஎம்எஸ்ஸை பயன்படுத்துபவர் கள் மற்றும் பயன்பாடு ஆணைத் தொடர்கள் அணுகும்போது தர தகவல் பொருள் வரையறைகளை தானாகவே செயற்படுத்தும் தகவல் அகராதி .

active device : இயங்கு உறுப்பு: மின் னோட்டம் மின்னழுத்தம் பெருக்கு தல் போன்ற செயல் திறனுடைய மும்முனையம் போன்ற ஒரு மின்னணுச் சாதனம்.

active element : இயங்கு பொருள்: சமிக்ஞையில் இயங்கும் ஒரு மின்னணு மின்சுற்று.

active file : நடப்புக் கோப்பு; பயன் படும் கோப்பு : தற்பொழுது பயன் படுத்தப்படும் கோப்பு.

active partition : இயங்கும் பாகம் : வன்பொருளில் மின்சக்தி வந்தவுடன் பயன்படுத்தப்படும் இயக்கு முறை யைக் கொண்ட ஒரு கணினி மொழி. நிலைவட்டின் பகுதி.

active programme : நடப்பு ஆணைத் தொடர் : நடப்பில் இயங்கிக் கொண் டிருக்கும் ஆணைத் தொடர்.

active star : இயங்கும் நட்சத்திரம்: வெளியிலுள்ள முனைகள் ஒரு தனி மைய முனையுடன் இணையும் ஒரு இணைய கட்டமைப்பு முறை.

active window : இயங்கும் சாளரம் : மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் தொகுப்பில் இயங்கும் திறந்த சாளரம்.

activity : நடவடிக்கை ; செயற்பாடு : பணியின் பகுதிகளில் ஒரு நட வடிக்கை .

activity ratio : செயல்விகிதம் : கோப்பு ஒன்று கையாளப்படும் பொழுது நடவடிக்கைகளுக்கு ஆட்படும் ஆவணங்களுக்கும் கோப்பில் உள்ள ஆவணங்களுக்கும் இடையிலான விகிதம்.

actual argument : மெய்த் தொகை : ஒரு துணை ஆணைத் தொடரை அழைக்கும் சொற்றொடர், தொகைப் பட்டியலில் அனுப்பப்படும் மெய்த் தொகை.

actual decimal point : உண்மை பதின் மப் புள்ளி : ஓர் உள்ளீட்டுத் தகவல் பொருளில் சேர்க்கப்படும் உண்மை யாக இடம் பெறும் பதின்மப் புள்ளி .

actuate : உந்திவிடு .