பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adapter 50 add time

புறச்சாதனங்கள் அல்லது கூடுதல் வரிசை அல்லது இணைத்துறை ஆகியவைகள் ஏற்புச் சாதனங்களில் அடங்கும். adapter : ஏற்பி; இயைபி;பொருத்தி: பல்வேறு கருவிகளுக்கிடையே இயைபை அனுமதிக்கும் கருவிப் பகுதி.

adaptive routing : இயைபு வழி யமைப்பு: மாற்று வழியமைப்புக்கு மாறானது. இதில் ஒரு கூட்டமைப்பு மேலாண்மை, அமைப்புக் கட்டத் தில் உள்ள ஒவ்வொரு கம்பியின் போக்குவரத்தைக் கண்காணித்து எந்த வழித்தடத்தினைப் பயன்படுத்த லாம் என்று முடிவு செய்யப்படும்.

adaptive system : இயைபு அமைப்பு; தகவமைப்பு முறைமை : கற்கும் திறன், அதன் நிலையை மாற்றிக் கொள்ளு தல் அல்லது ஒரு தூண்டலுக்கு எதிர் வினையாற்றல் போன்றவற்றைக் காட்டும் கணினி அமைப்பு. அதன் சூழ்நிலையின் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கணினி அமைப்பு .

A-D converter : அளவியல் - எண்ணியல் மாற்றி: அலைவுமுறைத் தகவலை இலக்கமுறைத் தகவலாக மாற்றும் சாதனம். addend : கூட்டெண் : இரண்டு எண் களைக் கூட்டும் போது முதல் எண் கூட்டெண் என்றழைக்கப்படும்.

adder : கூட்டி : இரண்டு இரும எண் களைக் கூட்டப் பயன்படும் மின்னுறுப்பு.

adder unit : கூட்டி அலகு : இரண்டு பல இலக்க இரும எண்களை ஏற்று அவற்றைக் கூட்டும் திறனுள்ள ஒரு மின்னணுச் சாதனம்.

add-in : கூடுதல் இணைப்பு: கணினியில் ஏற்கெனவே பொருத்தப்பட்ட அச்சிடப்பட்ட இணைப்புப் பலகை யில் பொருத்தப்படக் கூடிய மின் னணு உறுப்பு. நுண் கணினியில் உள்ள காலியறைகளில் பொருத்தப் படக் கூடிய நினைவுச் சிப்புகள் ஓர் உதாரணம்.

adding wheel : கூட்ட ல் சக்கரம்: பற்கள் உள்ள பல்லிணை (கியர்). இது எந்திரவியல் முறையில் கூட்டல் நடவடிக்கையை அனுமதிக்கிறது. பாஸ்கல் கணக்கிடு பொறியில் பயன் படுத்தப்படுகிறது.

addition : கூட்டல் : இரண்டு மதிப்பு களைக் கூட்டுதல்.

addition record : கூட்டிய ஏடு : கோப்பு ஒன்றினைக் கையாளும் பொழுது புதிய ஏட்டை உருவாக்கு வதால் கிடைக்கும் ஆவணம். add-on: திறனேற்றி : கணினி அமைவு ஒன்றுடன் அதன் கட்டமைவு அல் லது செயல் திறனை மேம்படுத்த, அதன் சேமிப்புத் திறனை அதிகரிக் கப்பொருத்தப்படும் துணைக் கருவி அல்லது கருவி.

add time : கூட்டல் நேரம் : ஒரு கூட்டலைச் செய்யக் கணினிக்குத்