பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

airline 53 alias

வரைகலைகள் உருவாக்கப்படும். உண்மையான விமானத்தில் போன்றே இவற்றிலும் பயிலலாம்.

airline reservation system : வானூர்தி முன்பதிவு முறைமை : நேரடிப் பயன் பாட்டு அணுகல் கணினித் தொடர்பு முறை. இம்முறையில், வானூர்தி களின் இருக்கைகள் நிலை, வானூர்தி பறக்கும் நேர வரிசைகள், மற்றும் வானூர்திப் பணிகளை நடத்தத் தேவையான தகவல்கள், அந்நேரம் வரையிலான தகவல் கோப்புகளைப் பராமரித்தல், கோரல்களுக்கு விநாடி களுக்கு குறைவான நேரத்தில் பதி லளித்தல், முதன்மைக் கணினியி லிருந்து தொலை தூரத்தில் உள்ள பயணச்சீட்டு முகவர்களின் கேள்வி களுக்கு உடனடியாகப் பதிலளித்தல் ஆகியவற்றுக்கு கணினி பயன் படுத்தப்படுகிறது.

AISP : ஏஐஎஸ்பி : தகவல் அமைவுத் தொழில் நுட்பவியலாளர் சங்கம் எனப் பொருள்படும். Association of Information Systems Professionals என்பதன் குறும்பெயர். தகவல் அமைவுகளின் எல்லா அம்சங்களு டன் தொடர்புடைய தொழில் நுட்ப வியலாளர் சங்கம். 1972இல் உருவாக் கப்பட்டது. இதன் கிளைகள் உல கெங்கும் உள்ளன.

AL : தொகுப்பு மொழி.

alert box : எச்சரிக்கும் பெட்டி : ஒரு திரைக்காட்சிசிறிய பலகணி போன்று இருக்கும். பயனாளரின் அடுத்த இயக்கம் தவறானதாக இருந்தால் இது எச்சரிக்கும். சுட்டுப் பொறி (மவுஸ்) பொத்தானை அழுத்தியோ அல்லது விசை மூலம் ஆணை கொடுத்தோ இதற்குப் பதில் தரப் படும்.

alert messages : எச்சரிக்கைச் செய்திகள் : செய்யப்படும் இயக்கம் தவறா னது அல்லது இயலாதது என்பதை உணர்த்தும் செய்திகள்.

algebra : அல்ஜீப்ரா ; இயற்கணிதம்: ஒரு வகைக் கணிதம். இதில் எழுத்து கள் எண்ணிக்கை அலகுகளை பிரதி நிதித்துவப்படுத்துகிறது. எண் கணித விதிகளின்படி இம்முறை கையாளப் படுகிறது.

algebra of logic : தருக்க முறை அல்ஜீப்ரா ; தருக்க முறை இயற்கணிதம் : இதில் தருக்க முறை உறவுகள் இயற் கணித அல்ஜீப்ரா சூத்திரங்களாக வெளியிடப்படுகின்றன. ஜார்ஜ் பூலே இதனை அறிமுகப்படுத்தினார்.

ALGOL : அல்கோல் : அல்கோரித்மிக் மொழி என்பதன் குறும் பெயர். பிரச் சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான கணித முறைகளைச் செய்யப் பயன் படும் சர்வதேச உயர்நிலை கணினி மொழி.

algorithm : கணிமுறை ; நெறிமுறை: ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான நடவடிக்கைகள் மூலம் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரை யறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள்.

algorithmic language : கணி முறை மொழி; நெறிமுறை மொழி : அல் கோரிதம்களை வெளியிட வடி வமைக்கப்பட்ட மொழி.

alias : மாற்றுப் பெயர்; மறு பெயர்; புனை பெயர் : ஒரு ஆணைத் தொகை