பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aliasing 54 alphanumeric

மற்றும் ஆணையைக் குறிப்பிட பயனாளர் வழங்கும் பெயர்.

aliasing : ஏற்பற்ற தோற்ற மாறுபாடு : கணினி உருவாக்கிய படிமங்களில் ஏற் படக்கூடிய விரும்பத்தகாத தோற்ற மாறுபாடுகள். இத்தோற்ற மாறுபாடு களில் பொதுவான விளைவு படிமத் தின் எல்லைகளில் தோன்றும் ஒழுங் கற்ற கோடுகளாகும்.

aligning disk : இயைவு வட்டு.

allgning edge : ஒழுங்கமை விளிம்பு: வடிவத்தின் முன் விளிம்புடன் இணைந்து ஓர் ஆவணத்தை நிலைப் படுத்தி கருவி மூலம் நுண்ணாய்வு செய்ய உதவும் ஒப்பு விளிம்பு.

alignment : இயைவு நிலை : கருவி யின் எந்திர அமைவிற்கு எந்திரம் முறையாக இயங்கப் பிழை பொறுத் தல் நிலைகளைச் சரி செய்தல்.

allocation : ஒதுக்கீடு : ஆணைகள் தகவல்களுக்காக கணினி சேமிப் பகப் பகுதிகளை ஒதுக்கீடு செய்யும் முறை. சில சமயங்களில் ஆணைத் தொகை வகுப்போர் அதனைச் செய் கிறார்கள். துணைத் தொகை ஒன்றி னால் தானியக்க முறையிலும் அதனைச் செய்வதுண்டு.

all points addressable : அனைத்துப் புள்ளி முகவெண்ணிடல் : ஒரு ஆணைத் தொடரில் திரையில் உள்ள ஒவ்வொரு படப் புள்ளியையும் தனித் தனியாக முகவெண்ணிடக் கூடிய ஒரு வரைகலை முறை.

ALOHA : அலோஹா : செயற்கைக் கோள் தகவல் தொடர்புகளில் ஒரு முறை வடிவாய் அமெரிக்காவில் முதன் முதலில் பயன்படுத்தப் பட்டது.

alphabetical order : அகர வரிசை : ஆங்கிலத்தில் ஏ முதல் இசட் வரை.

alphabetic : எழுத்துக் கோவை : எழுத்துகள் மற்றும் சிறப்புக் குறி ' யீடுகளைக் கொண்ட தகவல்கள்.

alphabetic string : எழுத்துக் கோவை; எழுத்துச்சரம்: எழுத்துகளின் தொகுதி களைக் கொண்ட ஒரு கோவை.

alpha channel : எழுத்து வழித் தடம் : 32 துண்மி வண்ணக் கணினி அமைப் பில் கூடுதல் 8 துண்மி தகவல் வழித் தடத்தைக் குறிக்கும் ஆப்பிள் கணினிச் சொல். இது படப் புள்ளி களின் தெளிவைக் கட்டுப்படுத்து வதன் மூலம் பல ஒளிக்காட்சி மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது.

alpha micro systems : எழுத்து நுண் அமைப்புகள் : ஓர் உயர்முனை நுண் கணினி. சிறு கணினி என்றும் வகைப்படுத்தலாம்.

alphamosaic : எழுத்துக் கோலம்: மிகக் குறைந்த தெளிவு கொண்ட காட்சி தொழில் நுட்பம். அஸ்கியின் மேல் பகுதியைக் கொண்ட அடிப்படை வரைகலை எழுத்துகளை மட்டும் பயன்படுத்துவது.

alphanumeric : எழுத்து எண்: எழுத் தும் எண்ணும் கொண்ட வரைவுருக் களுக்கான பொதுச் சொல் எழுத்து கள். (A) முதல் (z) இசட் வரை கணினி எண் இலக்கங்கள், சிறப்புக் குறி யீட்டுப் படிவங்கள்.