பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alternate sec 56 American Soc

alternate sector : மாற்றுப்பிரிவு: காந்த வட்டில் ஒரு பிரிவு சோதனையின் போது மோசமானது என்று கண்டு பிடிக்கப்பட்டால் வேறு பிரிவைப் பயன்படுத்துவது.

alternate track : மாற்று வழித் தடம் : நேர் அணுகு சேமிப்பகத்தின் குறை பாடுள்ள வழித் தடத்திற்கு மாறான வழித் தடம்

alternating current : (AC) மாறு மின்னோட்டம் : ஒரு விநாடிக்கு 50 அல்லது 60 முறை தனது ஓட்டத் திசையை எதிர் எதிராக மாற்றிக் கொள்ளும் மின்சாரம். நேர்மின்சாரத் துக்கு மாறானது.

alternator : மாற்றி :

ALU : கணித தருக்க முறை அலகு : கணித தருக்கவியல் (Arithmetic Logic Unit) பகுதியின் குறும் பெயர். மையச் செயலகத்தின் (CPU) ஒரு பிரிவாகும். இங்கு கணித மற்றும் தருக்கச் செயல் கள் நிகழ்கின்றன.

ambient conditions : சூழல் நிலைமை : ஒளி, வெப்பம், ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் நிலைகள்.

ambient temperature : சூழல் வெப்பம்: ஒரு கருவியைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலை.

Amdahl Gene : அம்தால் ஜெனி : முன்பு ஐபிஎம் கணினிகள் பல வற்றை உருவாக்கிய இவர் ஐபிஎம் கணினி-360 வரிசை முறைமையை உருவாக்கியதன் மூலம் கணினிக் கட்டமைப்பில் புரட்சியை 1964இல் நிகழ்த்தினார். இந்தக் கணினியில் ஒருங்கிணைந்த இணைப்புகள் முத லில் பயன்படுத்தப்பட்டன. அவர் பின் அம்தால் வாரியத்துக்காகப் பல கணினிகளை வடிவமைத்தார்.

American Federation of Information Processing Societies (AFIPS) : அமெரிக்க தகவல் கையாளும் சங்கங் களின் கூட்டமைப்பு: கணினி, அறிவி யல் மற்றும் தகவல் கையாளும் நிறுவனங்களின் பிரதிநிதித்துவ அமைப்பு. உலகின் மிகப் பெரிய கணினி மாநாடகிய வருடாந்திர தேசிய கணினி மாநாடுகளை சார்பா ளராக நடத்துதல், அரசின் கல்வி, ஆய்வு நடவடிக்கைகள், தர நிலை கள், நடைமுறைகள், கணினி வர லாற்றியல் தொடர்பான குழுப் பணி களை நிறைவேற்றுதல் உள்பட பல நடவடிக்கைகள் இதன் பணிகளா கும். தகவல் கையாளுதலுக்கான பன் னாட்டுக் கூட்டமைப்பில் அமெரிக் கப் பிரதிநிதியாகவும் உள்ளது.

American National Standards Institute (ANSI) : அமெரிக்க தேசிய தர நிறுவனம் : அமெரிக்காவில் சுய தர நிலை களுக்கான தேசிய ஒப்புதல் நிறுவன மாகவும் ஒருங்கிணைப்பு நிறுவன மாகவும் இவ்வமைப்பு செயல்படுகிறது.

American Society for Information Science (ASIS) : தகவல் அறிவியல் சங்கம் : தகவல் பரிமாற்றத்தை மேம் படுத்த உழைக்கும் நூலகர்கள், தக வல் வல்லுநர்கள், அறிவியலாருக்கு அரங்கம் ஒன்றை வழங்கும் தொழில் முறை அமைப்பு இது. இதன் உறுப் பினர்கள் பெரும்பாலும் கற்றவர்கள், செயல்முறை நிர்வாகிகள், மேலாளர் கள், ஒருங்கிணைப்பாளர்கள், தக வல் துறை தொழில் நுணுக்க வல்லு நர்கள், அறிவியலார். இவர்கள் அமைவு ஆய்வு, வடிவமைப்பு ஆகிய துறைகளில் பணி புரிகிறார் கள். தகவல் தொடர்பு திட்டங்களை, சேவைகளை நிர்வகிக்கிறார்கள். தகவல் தொடர்பு சந்தை, தகவல் திட்ட சேவைகள், தகவல் தொடர்பு