பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

relational

தகவல் தள மேலாண்மைப் பொறி யமைவு: பன்முக அட்டவணைகளை அந்த அட்டவணைகளுக்குள் அடங் கிய பொதுவான தகவல் இனங்கள் அல்லது புலங்கள் அடிப்படையில், ஒன்றுக்கொன்று இணைவுடைய தாக அல்லது தொடர்புடையதாகச் செய்யக் கூடிய தகவல்தளம். எடுத்துக்காட்டு: ஒரு பெயர் மற்றும் முகவரிக் கோப்பில், தெருப்பெயர், நகரின் பெயர், மாநிலத்தின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றுக் கான புலங்களும் அடங்கியிருக்க லாம். ஒவ்வொரு புலத்தையும் நிறைவு செய்து ஓர் ஆள் பற்றிய ஒரு தகவலஆவணததை உருவாககலாம. relational data structure: @lässt soup. தகவல் கட்டமைவு : தகவல் தளத் தினுள் தகவல் கூறுகள் அனைத்தும் எளிய அட்டவணைகளின் வடிவத் தில் சேமிக்கப்படுவதாகக் காட்டும் ஒரு தருக்கமுறைத் தகவல் கட்ட மைவு. தொடர்புறு மாதிரியில் அமைந்த DBMS தொகுதிகள் பொது வான தகவல் கூறுகளைக் கொண்ட பல்வேறு அட்டவணைகளிலிருந்து தகவல் அம்சங்களை இணைக்க வல்லவை.

relational expression : @gm Lil நிலைக் கோவை : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்கங்களைக் கொண்ட கோவை.

relational operator : @@ILoufléoéo இயக்கி;உறவு இயக்கி;உறவுச்செயல் பாடு ; ஒப்பீட்டுக்குறியீடு : இரண்டு மதிப்பளவுகளை ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு. இது, மதிப்பளவு மெய்ம்மையானதாக அல்லது பொய்ம்மையானதாக இருப்பதற்கான நிபந்தனையைக் குறித்துரைக்கிறது.

578

relative

relational structure: @@ILñuffonsoë கட்டமைவு : தகவல் இனங்கள் அனைத்தும் ஒரே கோப்பில், ஒரு தருக்க முறைச் சுட்டுகளின் தொகுதி மூலம் ஒன்றாகப் பிணைக்கப்பட் டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள தகவல் தளப் படிவம். இந்தச் தகவல் இனங்களுக்கிடையிலான தொடர்பு நிலைகளை வேண்டியவாறு மாற்றிக் கொள்ளலாம்.

relative address: @gmu fill (p56Isl; சார்பு முகவரி : ஒரு குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடத்தின் முழுமுக வரியுடன் சேர்ந்து அமையுமாறு ஓர் ஆதார முகவரியுடன் சேர்க்கப்பட வேண்டிய முகவரி.

relative coding: @@ILälä, öffluit (5. முறை : எந்திர ஆணைகளை முகவரி களுடன் பயன்படுத்தும் குறியீட்டு முறை.

relative coordinate : @gml fills) ஆயத்தொலை : பயன்படுத்தப்படும் கடைசி ஆயத் தொலைவினைப் பொறுத்து நிருணயிக்கப்படும் ஒர் ஆயத்தொலை, (5,10) என்பது, வலப் பக்கம் 5 என்பதையும், மேல் நோக்கி 10 என்பதையும் குறிக்கிறது. (-5, -10) என்பது இடப்பக்கம் 5 என்பதையும், கீழ்நோக்கி 10 என்பதையும் குறிக் கிறது.

relative movement: @gmu_ffL B= சார்பு இயக்கம் : திரையில் ஒரு பொருள் அதன் கடைசி நிலையைப் பொறுத்துப் புதியதொரு நிலைக்கு நகருதல். இது '0'-லிருந்து நகர் வதற்கு மாறானது. "நகர்வு 4,8" என்பது, வலப்புறமாக 4 அலகு களும், கடைசி நிலையிலிருந்து மேலே 8 அலகுகளும் நகர்வதாகும். @g "(p(up 53, fiols" (Absolute movement) என்பதிலிருந்து வேறுபட்டது.