பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

analog rea 58 ND

தகவலாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான பிரதிநிதித்துவமாகும். இலக்கப் புள்ளி தகவல்களுக்கு இது எதிரானது.

analog reasoning : ஒத்திசை வடிவப் பகுப்பாய்வு : முறைமை ஒன்றின் மாதிரி வடிவு ஒன்றை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முறைமை குறித்த முடிவுகளை எடுத்தல்.

analog model : ஒத்திசை வடிவு : நிலவும் சூழலுக்கு ஏற்ற இயற்பியல் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மாதிரி வடிவு.

analog representation: ஒத்திசைவான பிரதிநிதித்துவம் : தனிப்பட்ட மதிப் பீடுகள் அற்ற பிரதிநிதித்தும். ஆனால் தொடர்ந்து மாறக் கூடியது.

analog signal : ஒத்திசைவான சமிக்ஞை : மனிதக் குரல் போல தொடர்ந்து அலை வடிவில் மாறிச் செல்லும் சமிக்ஞை .

analog to digital converter (A-D con verter) : ஒத்திசைவிலிருந்து இலக்க வியலுக்கு மாற்றி (ஏ-டி மாற்றி) : தொடர்ச்சியான அளவியல் சமிக் ஞைகளை தனித்தனியான எண் களாக மாற்றக்கூடிய மின்னுறுப்பு. எண்களை அளவியல் மதிப்புகளாக மாற்றும் உறுப்புக்கு எதிரானது.

analog transmission : ஒத்திசை பரப்பி: தகவல்களை தொடர்ச்சியான அலை வடிவ முறையில் பரப்புதல்.

analyst: பகுப்பாய்வாளர் : பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதற்கான உத்திகளை உருவாக்குகிற, அதனை வரையறை செய்கிற திறனுள்ள நபர். குறிப்பாக கணினி ஒன்றில் தீர்வுக்கான உத்தி களை வகுப்பவர்.

analyst/programmer : பகுப்பாய்வாளர் / செயல் நிரலாளர்.

analytical engine : பகுப்பாய்வுக் கருவி; பகுப்பாய்வுப்பொறி : கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்க 1800களின் மத்தியில் பிரிட்டன் கணிதவியலாள ரான சார்லஸ் பாபேஜ் என்பவர் கண்டுபிடித்த கருவி. நவீன எண் இலக்கவியல் கணினியின் முன்னோடி.

analytical graphics : பகுப்பாய்வுவரை கலை : பாரம்பரிய வரி வரைபடங் கள், மற்றும் பட்டை வரை படங் களைக் கொண்டு தகவல்களை ஆராய்தல், விரிவுத்தாள், தகவல் தளம் அல்லது சொல் செயலாக்க ஆணைத் தொடரில் அமைக்கப்பட் டுள்ள வரைகலை.

ancestral file : முந்தையக் கோப்பு: கோப்பில் உள்ள தகவல் தொலைந்து போகும் அல்லது சிதைந்து போகும் என்ற எச்சரிக்கையினால் முந்தைய கோப்பு பாதுகாப்பாக வைக்கப்படு கிறது. ஒரு கோப்பின் மூன்று பிரதி கள் வைக்கப்பட வேண்டும். தாத்தா, பெற்றோர், குழந்தை, சமீபத்தை யதைப் பயன்படுத்துவது குழந்தைக் கோப்பாகும். குழந்தைக்குச் சேதமா னால் அப்பா கோப்பையும், அதுவும் சேதமானால் தாத்தா கோப்பையும் தேடி எடுத்து பயன்படுத்தலாம்.

AND : பிணைப்பி : தருக்கவியல் பிணைப்பி மற்றும் 'பி' என்ற சொற் றொடரில் உள்ளது போல இதன் பொருள், 'ஏ' யும் 'பி'யும் ஒரே நேரத் தில் உண்மையாக இருந்தால் மட்டுமே சொற்றொடர் உண்மை யானதாக அமையும் என்பதாகும். இதனை தருக்கவியல்' பெருக்கி என்றும் கூறலாம்.

AND gate : பிணைப்பு வாயில் : 1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல்