பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

schema

599

Scienti


 மானிப்பதற்கான பணி. 2. பகிர்ந்து கொள்ள முடியாத ஆதாரங்களை ஒதுக்கீடு செய்தல். எடுத்துக்காட்டு: மையச் செயலகம் அல்லது ஒருங்கிணைந்த மின்சுற்று வழிச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட மணிக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒதுக்கீடு செய்தல்.

schema : அமைப்பு முறைகள் , (தகவல் தள நிர்வாக மொழிகளில் ஒன்று): தகவல் தளத்தின் கட்டமைப்பினை வரையறுப்பதற்காக தகவல் தள நிருவாகியினால் பயன்படுத்தப்படும் உயர்நிலைக் கணினி மொழி.

schematic : திட்ட முறையிலான , அமைப்புப் படம், திட்டமுறை வரைபடம் : அமைப்புகளின் தொடர்புகளையும் அடையாளத்தையும் காட்டுகிற ஒரு மின்னணுச்சுற்று வழியின் வரைபடம்.

schematic symbols : திட்டமுறைச் சைகைகள், திட்டமுறைக் குறியீடுகள் , அமைப்புக் குறியீடுகள் : திட்டமுறை வரைபடங்களில் பயன்படுத்தப்படும் குறியீடுகள்.

Scheutz, George : ஷியூட்ஸ், ஜார்ஜ் (1785-1873) : இவர் 1834இல், சார்லஸ் பாபாஜின் எந்திரம் போன்ற ஓர் எந்திரத்தை உருவாக்கத் தொடங்கினார். இந்த எந்திரம் செய்து முடிக்கப்பட்டு, கணித அட்டவணைகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டது.

Schickhardt, Wilhelm (1592-1635) : ஷிக்ஹார்ட், வில்ஹெல்ம் (1592-1635) : ஜெர்மன் கணிதப் பேராசிரியர். கணிப்பு எந்திரத்தை 1624இல் கண்டுபிடித்தவர்

scientific applications : அறிவியல் பயன்பாடுகள் : மரபாக எண்களை அடிப்படையாகக் கொண்ட, முன்னேறிய பொறியியல் கணித அல்லது அறிவியல் திறம்பாடுகள் தேவைப்படுகிற பணிகள். வணிகப் பயன்பாடுகளின் விரிவான கோப்புக் கையாளும் திறம்பாடுகள் அரிதாகத் தேவைப்படும்.

scientific computer : அறிவியல் கணினி : அதிவேகக் கணிதச் செய்முறைப்படுத்ததலுக்கான தனி வகைக் கணினி

scientific language : அறிவியல் மொழி : கணிதச் செய்முறைப்படுத்தலுக்காக வடிவமைக்கப்பட்ட செயல் முறைப்படுத்தும் மொழி. ALGOL, FORTRAN, APL போன்றவை இவ்வகையின. செய்முறைப்படுத்தும் மொழிகள் அனைத்தும் இந்த வகைச் செய்முறைப்படுத்தலை அனுமதித்தாலும், ஓர் அறிவியல் மொழியிலுள்ள கட்டளைகள், இந்த நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதை எளிதாக்குகின்றன.

scientific method: அறிவியல் முறை : ஒருவகைப் பகுப்பாய்வு முறைமையியல். இதில், உணர்ந்தறியும் நிகழ்வு, அந்த நிகழ்வின் காரண காரியங்கள் பற்றிய ஒரு முற்கோளை (Hypothesis) வகுத்தமைத்தல், பரிசோதனை மூலம் அந்த முற்கோளைச் சோதனை செய்தல், அந்தப் பரிசோதனைகளின் முடிவுகளைக் கணித்தறிதல், அந்த முற்கோள்பற்றி முடிவுகள் எடுத்தல் ஆகியவை உள்ளடங்கும்.

scientific notation : அறிவியல் குறிமானம், அறிவியல் குறியீடு : எண்கள் ஒரு குறிப்பிட்ட இலக்குப்பகுதியாக அல்லது பொருத்தமான 10-இன் வர்க்கத்தின் அல்லது விசைக் குறி எண்ணின் மடக்கையின் பதின்மான மடங்குகளாக எழுதப்படுகிற குறிப்