பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

screen

602

search


 screen size : திரை வடிவளவு , திரையளவு : ஓர் ஒளிப்பேழைக் காட்சித்திரை காட்டக் கூடிய தகவல்களின் அளவு. திரைகளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப்போல் மூலை விட்டமாகவோ, கிடைமட்ட மற்றும் கிடைமட்ட புள்ளிகளின் அல்லது எழுத்துகளின் எண்ணிக்கையாகவோ அளவிடலாம்.

screen update : திரை புத்தாக்கம், திரைப் புதுப்பி : புதிய தகவல்களைப் பிரதிபலிப்பதற்காகத் திரையின் உள்ளடக்கங்களை மாற்றும் செய்முறை.

scripsit : எழுத்து அடை : ரேடியோ ஷாக் TRS-80 நுண்கணினிப் பொறியமைவுகளில் சொற்களைச் செய்முறைப் படுத்துவதற்கெனப் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுதி.

scripts : எழுத்துகள் : நிகழ்வுகளின் வரிசை முறையினைக் குறிக்கும் ஸ்கீமா போன்ற கட்டமைப்பு.

scroll arrow : சுருள் அம்பு : மேலும், கீழும், இடமும் வலமும் நகர்த்திச் சுட்டிக்காட்டுகிற உருவம். இணையான திசையில் திரையைச் சுருட்டுவதற்காக இது இயக்கப்படுகிறது.

scroll : நகர்த்து, உருட்டு :

scrollable field : சுருட்டத் தக்க புலம்: ஒரு சிறிய காட்சிப் பரப்பில் பெருமளவுத் தகவல்களைக் காட்சியாகக் காட்டுவதற்கு அல்லது தொகுப்பதற்கு அனுமதிப்பதற்காகச் சுருட்டக்கூடிய திரையிலுள்ள குறுகிய வரி.

scrolling : திரை சுழலல், சுருளாக்கம், சுழற்றுதல்: ஓர் ஒளிப்பேழைக் காட்சியில் தகவல்களை நகர்த்துதல். வாசகத்தில் விரும்பிய இடம் வரும் வரையில் வாசகம் திரும்பத் திரும்ப நகர்த்தப்படுகிறது. சுருள் மேல் நோக்கி நகர்ந்தால், திரையின் அடிப்பகுதியில் ஒரு புதிய வரி தோன்றும்; உச்சிப்பகுதியில் பழைய வரி மறையும். தகவல்களை வலமிருந்து இடமும், இடமிருந்து வலமும் கீழ் நோக்கியும் நகர்த்தும் திறனையும் இது குறிக்கிறது.

scroll lock : திரைச்சுழல் பூட்டு.

SCS : எஸ்சிஎஸ் : 'கணினி தூண்டுதல் கழகம் என்று பொருள்படும்'Society for Simulation' என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

S-curve : எஸ்-வளைவு : ஆட்களுக்கெதிராக நேரத்தை வரைகிற வளைவு. இது ஆதார ஒதுக்கீட்டினைச் சமனப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரங்களைச் சீரமைவு செய்வதற்கு ஆள்பலத்தைப் படிப்படியாகக் குறைப்பதற்கு இது உதவுகிறது.

scuzzy : ஸ்கஸ்ஸி : SCSI-க்கு மற்றொரு பெயர்.

seamless integration: இடைவெயியற்ற ஒருங்கிணைப்பு : தற்போதுள்ள பொறியமைவுடன் இழைவாகப் பணிபுரிகிற ஒரு புதிய பயன்பாடு, வாலாயம் அல்லது சாதனம். இதன் மூலம் புதிய அம்சங்களைத் தூண்டி விடலாம்; சிக்கல்களைக் கண்டறியப் பயன்படுத்தலாம்.

search : தேடுதல், தேடு,தேடல்: ஒரு குறிப்பிட்ட நேரம் அல்லது பகுதி எண் போன்ற விரும்பிய பண்பினை அல்லது முன் நிருணயித்த வகைப்பாட்டினைக் கொண்டிருக்கின்ற ஓர் இனத்தொகுதியை தேடிக் கண்டறிதல்.

search and replace: தேடுதல் மற்றும் மாற்றமைத்தல், தேடி மாற்றியமை :