பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ANSI-COB 60 app


ANSI-COBOL : அன்சி- கோபால் : 1974இல் அமெரிக்க தேசிய தர நிறுவனம் தரப்படுத்திய கோபால் கணினி மொழிப்பதிப்பு.

ANSI terminal : அன்சி முனையம் : தரமான அன்சி மொழியில் உள்ள ஆணைகளைப் பின்பற்றும் காட்சி முனையம்.

answer mode : விடை நிலை : மற்றொரு மோடெம் ஒன்றி லிருந்து வரும் அழைப்பை மோடெம் ஒன்று ஏற்கும் திறன் நிலை.

answer originate : விடையளி / தொடக்கு .

answer tone : விடை ஒலி : மோடெம் பதில் கொடுத்துவிட்டது என்பதை அழைத்தவருக்குக் கூறும் ஒலிக் குறிப்பு.

answering machine : விடையளிக்கும் பொறி; விடைப்பொறி: வரும் களைச் சேகரிப்பது. முற்பதிவு செய்தி களை அழைத்தவருக்கு அனுப்பி, பதில் அளிக்க வேண்டியவர் இல்லாத குறையைத் தீர்க்கும் பொறி.

antenna : மின்காந்த அலை வாங்கி.

anthropomorphism : மனிதப் பண் பேற்றல் : கணினிகள் மற்றும் கணினி களால் கட்டுப்படுத்தப்படும் விசைக் கருவிகளைக் குறிப்பதற்கான உருவக முறை. இதில் அவை மனிதர்கள் போன்று கருதப்படுகின்றன.

antistatic mat : நிலை மின்சார எதிர்ப் புப் பாய்: நிலை மின்சாரத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைத் தடுக்க ஒரு சாதனத்தின் முன்னால் வைக்கப் படும் தரைப்பாய். மனிதர்கள் அல கைக் கையாளும்போது ஏற்படும் அதிர்ச்சியால் தகவல்கள் அழிந்து போகாமல் இது காப்பாற்றும்.

anti-aliasing : மாற்று நீக்கி :திரையில் காட்டும் வடிவம் ஒன்றின் விளிம்பு களும் கோடுகளும் பிசிரற்றதாக தோன்றக் கையாளப்படும் வடி கட்டும் உத்தி.

antivirus programme : நச்சு ஆணை எதிர்ப்புச் செயல் முறை : நச்சாணை களைக் கண்டுபிடித்து வெளியேற் றும் செயல் முறை.

aperture card : துளை அட்டை : நுண் படச்சுருள் பொருத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட திறப்புள்ள, துளை அட்டை .

API : ஏபிஐ : Applications Progra. mming Interface என்பதன் சுருக்கம்.

APL : ஏபிஎல் : A Programming Language எனும் கணினி மொழிக்கான குறும் பெயர். கணித முறையில் அமைக்கப்பட்ட செயல்முறைப்படுத் தும் மொழி, கணக்குகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் பிரபலமானது. ஏபிஎல் தன்னுடைய எளிய முறை இயக்கங்கள் மூலம் புத்திசாலித்தன மான கணக்கிடு கருவி ஒன்றின் பணி களைச் செய்கிறது.

app code : ஏபிபி குறியீடு : பயன் பாட்டுக் குறியீடு. தகவல்களை செய லாக்கம் செய்யும் ஒரு ஆணைத் தொடரில் உள்ள ஆணைகள்.