பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

append 61 application


append : இணை ; கூட்டு : தகவல் களைத் தொகுப்பு ஒன்றுடன் மேலும் புதிய ஆவணங்களைச் சேர்த்தல் அல்லது எழுத்துத் தொடரின் இறுதி யில் அல்லது பட்டியலின் இறுதியில் சேர்த்தல்.

Apple : ஆப்பிள் : நுண் கணினி வரிசையொன்றின் விற்பனைப் பெயர். இவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் ஆப்பிள் கணினி நிறுவனம் ஆகும்.

Apple computers : ஆப்பிள் கணினிகள் : தனிநபர், கல்வி, வணிகம் மற் றும் மேசைக் கணினி வழி நால் பதிப்பகப் பயன்பாடுகளில் அதிகம் பயன் படும் நுண்கணினிகள்.

Apple information technology division: ஆப்பிள் தகவல் தொழில் நுட்பப் பிரிவு : கணினி ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனம்.

Apple key: ஆப்பிள் விசை: கட்டளை விசையின் பழைய பெயர்

Apple menu : ஆப்பிள் பட்டியல் : மெக்கின்டோஷ் திரையின் இடது பக்க மேல் பகுதியில் உள்ள பட்டியல்.

Apple printer: ஆப்பிள் அச்சுப்பொறி: கணினி வெளியீட்டின் அச்சுப் பிரதியைப் பெற பயன்படுத்தும் சாதனம். அச்சுப்பொறியானது அழுத்த முறை அல்லது அழுத்தம் அல்லாத முறை யினதாக இருக்கலாம். ஆப்பிள் லேசர் அச்சுப் பொறிகள் பிரபலமாக வும் உயர்தர வெளியீட்டை அளிப்ப தாகவும் இருக்கின்றன.

Apple scanner : ஆப்பிள் வருடி : 34 செ.மீ X 21 - 25 செ.மீ. அளவுள்ள உருவங்கள் ஒரு அங்குலத்துக்கு 300 புள்ளிகள் என்ற அளவில் வருடி மெக்கின்டோஷுக்கு மாற்றுகிறது.

Appleshare : ஆப்பிள்ஷேர் : ஆப்பிள் நிறுவனத்திலிருந்து உருவான பி.சிக் கான மென் பொருள்.

Apple soft BASIC : ஆப்பிள் மென் பேசிக் : ஆப்பிள் ஐஐசி மற்றும் ஐஐஇ கணினிகளில் பயன்படுத்தப்படும் விரிவுபடுத்தப்பட்ட அடிப்படை ஆணைத் தொகுப்புகளை உருவாக் கப் பயன்படுத்தப்படும் மொழி. பதின்ம எண்களைக் கையாளும் திறன் கொண்டது. ஆப்பிள் மென் பேசிக்கில் ஆணைத் தொகுப்புகளை உருவாக்கவும் நிறைவேற்றவும் கணினியிலேயே உள்கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட ஆணை மாற்றி.

applet : ஆப்ளெட் : பயன்பாட்டு ஆணைத் தொடர் போன்ற சிறிய பயன்பாடு. ஜாவா மொழியில் உருவாக்கப்படும் சிறு சிறு செயற் கூறுகள் இவ்வாறு அழைக்கப்படு கின்றன.

application controller : பயன் கருவிக் கட்டுப்படுத்தி : கணினி ஒரு துணைக் கருவியைக் கட்டுப்படுத்த உதவும் சாதனத்திற்குப் பொதுவான பெயர்.

application control : பயன்பாட்டுக் கட்டுப்பாடு : கணினி பயன்பாடு - உற் பத்திப் பயன்பாடுகளில் துல்லிய மாக, சரியான நேரத்தில், தகவல்கள் செயலாக்கப்படுவதை உறுதி செய்ய, கணக்குத்துறை மற்றும் கணினித் துறை தொழிலில் ஈடுபட்டுள்ளவர் கள் பரிந்துரைக்கும் கட்டுப்பாடு.

application developer: பயன்பாடு உரு வாக்குபவர் : வணிகப்பயன்பாட்டை உருவாக்கி அமைப்பு ஆய்வாளர் மற்றும் பயன்பாட்டு ஆணைத் தொட ராளர் பணிகளைச் செய்யும் ஒரு நபர்.

application development system: பயன்பாட்டு உருவாக்க அமைப்பு