பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

archive bit

64

arithme



archive bit : ஆவணக் காப்பகக் குறி: ஒரு கோப்பு ஆவணக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள உதவும் ஒரு செய்திக் குறிப்பு.

arcnet : ஆர்க்நெட் : ஒரு கணினி கட்டமைப்புத் திட்டம்.

area search :பகுதி தேடல் : பெரும் எண்ணிக்கையிலான ஆவணத் தொகுதிகளில் குறிப்பிட்ட ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பரிசீலித்தல்.

argument : மதிப்புரு:இணைப்பு மாறி.

argument in programming: ஆணைத் தொடரில் விவாதங்கள் : ஆணைத் தொடர்கள், துணைச் சுற்றுகள் மற்றும் பணிகளுக்கிடையில் அனுப்பப்படும் ஒருமதிப்பு. தகவல் அல்லது குறியீடுகளைக் கொண்டுள்ள விவாதங்கள் தனி வகைகள் அல்லது மாறி கள் ஒரு பயனாளருக்காக சரிசெய்ய விவாதத்தைப் பயன்படுத்தும்போது, அது ஒரு 'அளவு கோல்' என்று சொல்வதுண்டு.

arithmetic:எண்கணிதம்: 1. கணிதவியலின் ஒரு பகுதி - உடனிலை முழு எண்கள் மற்றும் பூஜ்யம் ஆகியவற்றின் ஆய்வு தொடர்பானது. 2. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பானது. அல்லது இப் பணிகளைச் செய்யும் கணினி திடக் கருவியின் ஒரு பகுதி தொடர்பானது.

arithmetic coding : கணிதக் குறியீடமைத்தல்: புள்ளிவிவர முறை தகவல்களை சுருக்கும் முறை. தகவல் சரங்களை 0 முதல் 9 வரை உள்ள தனி பதின்ம எண்ணாக மாற்றுவது.

arithmetic expression : கணக்கீட்டுக் கோவை; எண் கணிதக் கோவை : ஒன்று அல்லது கூடுதலான எண்கள்,


மாறிகள், செயல்கள், குறியீடுகள் அல்லது இவை இணைந்த கோவை. கணக்கீட்டின் விளைவாக ஒரு தனி மதிப்பைக் குறிப்பிடுவது.

arithmetic instruction : கணித ஆணை: கணித இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்குச் சொல்கிறது.

arithmetic logic unit : கணித தருக்கவியல் அலகு : மைய தயாரிப்பு அலகின் அடிப்படை அம்சம். அங்கு கணித மற்றும் தருக்கவியல் நடவடிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன.

arithmetic operation : கணிதவியல் நடவடிக்கை; எண் கணித வினை : எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அடங்கும்.

arithmetic operator : கணிதக் குறியீடு : ஒரு கணக்கீட்டைச் செய்ய கணினிக்கு கூறும் குறியீடு. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களைக் குறிப்பிடும் செய்குறிகள். a

arithmetic overflow : கணித மிகை ஓட்டம் : அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி வெளியே வரும் கணக்கீட்டின் விளைவு.

arithmetic register: கணிதப் பதிவகம்: கணித மற்றும் அளவை இயக்கங்களைச் செய்வதற்கென்றே ஒதுக்கப்பட்ட பதிவகம்.

arithmetic shift : கணிதவியல் பெயர்ச்சி: ஓர் எண்ணிக்கையினை அடிப்படை எண் ஒன்றினால் பெருக் கல் அல்லது வகுத்தல். எடுத்துக்