பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



artificial

66

assem


artificial language:Glsuspoo, Quons): வரையறை செய்யப்பட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்ட மொழி இவ்விதிகள் அதன் பயன்பாட்டுக்கு முன் உருவாக்கப்பட்டதாகும். இது இயற்கையான மொழிக்கு வேறு பட்டதாகும்.

ARTSPEAK: பேச்சுக்கலை: அனுபவமற்ற பயனாளர் கணினி வரைவுகளை வரை கருவியில் உருவாக்க உதவுவது.

ASA ; ஏஎஸ்ஏ : அமெரிக்க புள்ளியியல் சங்கம் எனப் பொருள்படும் American Statistical Association என்பதன் குறும்பெயர்.

ASCC : ஏஎஸ்சிசி:Automatic Sequence Controlled Calculator தானியக்கத் தொடர் செயல் கணக்கிடுவான் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும் பெயர். இது ஹார்வர்டு பல்கலைகழ கத்தில் ஹோவர்டு அய்க்கன் ஆணைப்படி உருவாக்கப்பட்டது. 1944இல் நிறைவு செய்யப்பட்டது. காகித நாடா ஒன்றில் சேமிக்கப்பட்ட ஆணைகளைப் பயன்படுத்துவது. 'ஹார்வர்டு மார்க்' என்றும் அழைக்கப்பட்டது.

ascender: ஏற்றி: கீழ்வரிசை எழுத்துகளின் ஒரு பகுதி எழுத்தின் முக்கிய பகுதிக்கு மேலே நீளுதல்.

ASIC :ஏஎஸ்ஐசி(அசிக்): Application Specific Integrated Circuit என்பதன் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட பயன் பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சிப்பு. மற்ற சிப்புகளை விட இதை விரைவாக உருவாக்கலாம். மாற்றங்களையும் எளிதாகச் செய்யலாம்.

ASCII : அஸ்கி: அமெரிக்கத் தகவல் பரிமாற்றத் திட்டக் குறியீடு : தகவல் பரிமாற்றத்துக்கான அமெரிக்கக் குறி


யீட்டுக்க்கான American Standard Code for Information Interchange என்பதன்,குறும்பெயர். ஏழு துண்மியுள்ள இந்தக் குறியீடு பல்வேறு வகையான சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகிறது.

ASIS ; ஏஎஸ்ஐஎஸ்; அசிஸ் : தகவல் அறிவியலுக்கான அமெரிக்க சங்கம் என்பதைக் குறிக்கும் American Society for Information Science என்பதன் குறும் பெயர்.

ASM: ஏஎஸ்எம்:அமைவு மேலாண்மை சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர்.

aspect card: ஆவண எண் அட்டை: தகவல் பெறும் அமைவில் உள்ள ஆவணங்களின் எண்கள் அடங்கிய அட்டை.

aspect ratio : வடிவ விகிதம் : ஒரு கணினி வரைபடத்தில் காட்சித்திரை அல்லது படவரம்பின் உயரத்துக்கும், அகலத்துக்கும் உள்ள விகிதம்.

ASR ; ஏஎஸ்ஆர் : தானியக்க முறையில் செய்தி அனுப்புதல் மற்றும் பெறுதலுக்கான Automatic Send/Receive என்பதன் குறும்பெயர்.

assemble : இணை; தொகு: கணினி ஆணைத் தொகுப்பு ஒன்றுக்காக தகவல்களை சேகரித்து, பொருட்படுத்தி ஒருங்கிணைத்தல். தகவல்களை கணினி மொழிக்கு மாற்றி, அதனை கணினி பின்பற்றுவதற்காக இறுதி ஆணைத் தொகுப்புக்குள் இணைத்தல்.

assembler: இணைப்பி; தொகுப்பி: இது ஒரு மொழி பெயர்ப்பி. கணினியைக் கையாளும் ஒருவர் தயாரித்த எந்திர மொழியில் இல்லாத ஆணைகளை ஏற்று, அதனை கணினி பயன்