பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thin

679

threat


கொண்டு வந்து காகிதத்தில் அச்சிடு கிறது.

thinfilm : மெல்லிய படச்சுருள்; மென் படலம் : ஒட்டவைத்த அடிப் பகுதி, பொதுவாக ஒரு தட்டையான பிளேட்டுகளாலான மெல்லிய புள்ளி களை வைத்து ஏற்படுத்தப்படும் கணினி சேமிப்பகம் அடிப்பகுதியும் சேர்க்கப்பட்ட கம்பிகளில் உள்ள மின் சக்தி மூலம் புள்ளிகள் காந்தப் படுத்தப்படுகின்றன.

thin film head : மெல்லிய படச்சுருள் முனை: அதிக அடர்த்தி உள்ள வட்டுகளுக் கான படி/எழுதுமுனை நிக்கல் இரும்பு மையத்தில் வைக்கப்பட்ட கடத்தும் படச்சுருளின் மெல்லிய அடுக்குகளால் இது அமைக்கப்படுகிறது.

thine film storage : மென்படலச் சேமிப்பகம்.

thin window display : மெல்லிய சாளரக் காட்சி : விசைப்பலகைகள், பாக்கெட் கணினிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு வரி காட்சித்திரை. எல் சி டி அல்லது எல் இ டி காட்சித்திரை.

third generation computers: மூன்றாம் தலைமுறை கணினிகள் : டிரான்சிஸ் டர்களுக்குப் பதிலாக பொருள்களை வாமனப் படுத்தி ஒருங்கிணைந்த மின் சுற்றுக்களைப் பயன்படுத்தும் கணினிகள், விலை குறைப்பு, வேக மான இயக்கம், கூடுதல் நம்பகத் தன்மை ஆகியவற்றை தரும் இவை 1964இல் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்னும் ஆதாரத் தொழில் நுட்பமாக இவையே உள்ளன.

third generation language: மூன்றாம் தலைமுறை மொழி : உயர்நிலை மொழிகளின் இன்றைய தலைமுறை இதுவே. சான்று: பேசிக், சி மற்றும் பாஸ்கல். 3GL என சுருக்கி அழைக் கப்படுகிறது.

third-party lease : மூன்றாமவர் அடமானம்: ஒரு தனி நிறுவனம் உற்பத்தி யாளரிடமிருந்து வாங்கிய கருவியை தானாக வேறு ஒரு இறுதிப் பயனாளருக்குத் தரும் ஒப்பந்தம்.

thirty-two-bit chip : முப்பத்திரண்டு துண்மிச் சிப்பு : ஒரே நேரத்தில் முப்பத்திரண்டு துண்மிகளைச் செயலாக்கம் செய்யும் மையச் செயலக சிப்பு.

Thomas Charles Xavier (Colmar, Thomas) : தாமஸ் சார்லஸ் சேவியர் (கால்மார், தாமஸ்) : 1820 இல் உரு வாக்கப்பட்ட கணக்கிடும் எந்திரம். நடைமுறை சாத்தியமான, பயனுள்ள வகையில் செயலாற்றிய முதல் கணிப்பி என்று இதைப் பற்றி கூறப்படுகிறது.

thrashing : அடித்தல்; புடைத்தல்; தாக்குதல் : மெய்நிகர் நினைவக அமைப்பில் நினைவக ஏற்றலுடன் தொடர்புள்ள மேற்பகுதி 'கடைதல்' (churning) என்றும் அழைக்கப் படுகிறது.

threaded :முறுக்கப்பட்ட: பல தனிப் பட்டதுணை ஆணைத் தொடர்களை அழைப்பதற் கேற்ற வசதியுள்ள ஒரு ஆணைத்தொடர்.

threaded tree : தொடுப்புறு மர அமைப்பு: மர மொத்த தகவல் அமைப்பை ஸ்கேன் செய்வதற்கு உதவும் கூடுதல் சுட்டுகளைக் கொண்ட மர அமைப்பு.

threat : அச்சுறுத்தல்; மருட்டல்.

threat agent : அச்சுறுத்தி.

threat analysis : அச்சுறுத்தல் பகுப்பாய்வு.