பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/696

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trunk

694

turnaround


 அமைப்பு. விண்டோஸ் மற்றும் ஒஎஸ்/2இல் இது பயன்படுகிறது.

trunk : நேர்பாதை.

tuple:ட்யூப்பிள்: உறவுமுறை தகவல் தள மேலாண்மையில் ஒரு பதிவேடு அல்லது ஒரு வரிசை.

true BASIC : ட்ரூ பேசிக் : பேசிக் ஆணைத்தொடரமைப்பு மொழியின் வடிவமைக்கப்பட்ட பதிப்பு.

true complement : உண்மை நிரப்பு எண்: உண்மை நிரப்பு பத்தின் நிரப்பு எண் மற்றும் இரண்டின் நிரப்பு எண்ணுக்கு உடன்பாட்டுச் சொல்.

truncate : துணிப்பு ; துணித்தல் : 1. துல்லியத்தை குறைத்து ஒரு எண்ணின் இறுதி எண்களை வெளியேற்றுதல். சான்றாக, 'பை' வரிசைகளை 3.14159 என்ற எண் துணிப்புச் செய் கிறது. எப்படியென்றால், இந்த எண்ணை எல்லையின்றி நீட்டிக்கலாம். 2. ஒதுக்கப்பட்ட இடத்தில் பொருந்தாத எழுத்துகளை வெட்டுதல். சான்றாக Rumplestritskin என்ற பெயரை அச்சிட்ட அறிக்கையில் பத்து எழுத்துப் பெயர்ப் புலத்தில் பொருத்த வேண்டுமென்றால் அப் பெயரை rumplestil என்று சுருக்குதல்.

truncation error: சுருக்குவதில் பிழை; துணிப்புப் பிழை : சுருக்குவதனால் ஏற்படும்பிழை.

trunk : தொலை : இரண்டு தொலை பேசி பொத்தான் அமைப்பு மையங்களுக்கு இடையில் ஏற்படும் நேரடிக் கம்பி இணைப்பு.

truth table : உண்மைப்பட்டியல்; மெய்நிலை அட்டவணை : ஒரு இரு மை மின்சுற்று உருவாக்குகின்ற உள் வீட்டு/வெளியீட்டுக் கூட்டல்களின் அனைத்து வாய்ப்புகளையும் முறையாகப் பட்டியலிடல்.

turbo : டர்போ : அதிவேக செயலாக் கம்/திறம்பட்ட இயக்கத்தைக் குறிப்பிடும் சொல். குறிப்பிட்ட பெயருடைய வன்பொருள், மென்பொரு ளைக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப் படுகிறது. பி.சி.யில் வேகமான கடிகார விகிதத்தைக் குறிப்பிடுகிறது. போர்லாண்ட் தன்னுடைய டர்போ சி மற்றும் டர்போ பாஸ்கல் ஆகியவற்றில் இதைப் பயன்படுத்தி பிரபலப்படுத்தியது.

turbo C : டர்போ சி : பலதரப்பட்ட வணிகப் பொருள்களை உருவாக்கப் பயன்படும் போர்லாண்ட் நிறுவனத்தின் 'சி' தொகுப்பி. அதன் மிக நன்றாக வடிவமைக்கப்பட்ட 'பிழை நீக்கி மிகவும் புகழ்பெற்றது.

turbo mouse : டர்போ சுட்டி (மவுஸ்): கென்சிங்டன் மைக்ரோவேர் நிறு வனத்தின் மெக்கின்டோஷ் டிராக் -பால். பந்து மெதுவாக நகர்ந்தால், சுட்டி மெதுவாக நகரும். ஆனால் அது வேகமாக நகர்ந்தால் திரையில் சுட்டி அதிகதூரம் போகும். பி.சி.யில் அதற்கு இணையானது திறம்பட்ட சுட்டி (expert mouse).

turn around : சுழற்சி திரும்பவரும் : ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய ஆகும் நேரம். ஒரு வேலையைச்செய லாக்கத்திற்குக் கொடுப்பதற்கும், முடிந்த வெளியீடு பெறுவதற்கும் இடையில் ஆகும் நேரம்.

turnaround document : சுழற்சி ஆவணம்; திரும்பி வரும் ஆவணம்: எந்திரம் படிக்கும் உள்ளீடாக ஒரு நிறுவனத்திற்குக் கணினி அமைப்பு அளிக்கும் வெளியீடு. (வாடிக்கை யாளர் விலைமதிப்பீடு மற்றும் பட்டியல்கள்).