பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/703

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uncondi

701

unibus


 ஆணைத் தொடரமைக்கக் கூடிய தருக்கப் பகுதி.

unconditional branch : நிபந்தனையற்ற கிளை :ஆணைத் தொடரமைத்தலில், GOTO, BRANCH, JUMP போன்ற ஆணை. இந்த ஆணை, கட்டுப்பாட்டினை ஆணைத் தொடரின் வேறு ஒரு பகுதிக்கு அனுப்பு கிறது.

unconditional branching: நிபந்தனையிலா கிளைத்தல்: நிபந்தனையின்றிப் பிரிதல்.

unconditional transfer : நிபந்தனையற்ற மாற்றல்: ஆணைத் தொடர் கட்டுப்பாட்டின் போது வழக்கமான வரிசையில் இயக்கப்படாமல், அதி லிருந்து பிரிந்து போகச் செய்யும் ஒரு ஆணை.

uncontrolled loop : கட்டுப்படுத்தப்படாத கண்ணி : தருக்க இறுதியை அடையாத ஆணைத் தொடர் கணினி.

undefined : வரையறுக்கப்படாத : ஆணைத்தொடரில் பயன்படுத்தப் படுவதற்கு முன்பு தகவல் வகை அல்லது குறிப்பிட்ட நீளம் தரப் படாத நிலையெண் அல்லது மாறி யைக் குறிப்பிடல்.

undefined variable : வரையறுக்கப்படாத மாறி.

undelete : அன்டிலெட்;மீட்டெடு : நீக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் கொண்டு வரும் டாஸ் (DOS) கட்டளை கோப்புகளை நீக்கிய பிறகு அதன் மீது எழுதப்படாவிட்டால் மட்டுமே இது செயல்படும்.

underflow: கீழோட்டம்: தேக்க இயலா கீழ்நிலை : 1. கணினியின் சேமிக்கும் திறனைவிடக் குறைவான எண்ணிக் கையில் கணக்கிட்டு முடிவுகளைக் கணினி தருவதால் ஏற்படும் சூழ் நிலை. 2. மிதக்கும் புள்ளிக் கணக்கீட் டில் மடங்கின் கூட்டலுடன் எஞ்சிய தைச் சேர்த்தால் மைனஸ் எண்வரும் சூழ் நிலை.

underlining : அடிக்கோடிடல்.

underpunch : கீழ்த்துளை: துளையிட்ட அட்டை பத்தியில் மூல தரக் குறியீட்டுத் துளைக்குக் கீழே போடப்பட்ட இரண்டாவது துளை.

underscan: அண்டர்ஸ்கேன் :காட்சித் திரையில் உள்ள வழக்கமான செவ்வக வடிவ பார்க்கும் பகுதியில் உள்ள ஒரு பகுதி.

undo: முன்செயல் நீக்கு: சொல் செய லாக்கக் கட்டளை. முந்தைய கட்டளைகளை செயலற்றதாக ஆக்கி சொற்பகுதியை மீண்டும் முன்பிருந்தது போலவே மாற்றுவது.

unerase : மீட்டெடு : முன்பே அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் கொண்டுவர உதவும் சில பயன் பாட்டு மென்பொருள் ஆணை. கோப்பை அழிப்பது என்பது கோப்பு ஒதுக்கும் பட்டியல் நுழைவினை மட்டுமே அழிக்கிறது. தகவல்கள் பொதுவாக நீக்கப்படுவதில்லை.

unformat : வடிவமைப்பை மாற்று : ஒரு டாஸ் கட்டளை. தவறுதலாக வடிவமைக்கப்பட்ட தகவல்களை வட்டிலிருந்து எடுப்பதற்கு உதவும்.

unformatted I/O : வடிவமைக்கப்படாத உ/வெ: அமைப்புக் கட்டுப்பாடு செய்யப்படாமல் தகவல்களைப் படித்தல்/எழுதல்.

unibus : ஒற்றைப்பாட்டை: அதிவேக தகவல் தொடர்புபாட்டை அமைப்பு. மையச் செயலகத்தின் உள்நினை வகத்திற்கும் வெளிப்புறப் பகுதி