பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Atanasoft 69 attached

வொரு எழுத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி வெவ்வேறாக இருக்கும். கணினிக்கும், மோடெத் துக்கும் இடையில் இத்தகைய தக வல் அனுப்பும் முறையே உள்ளது. ஒரு மோடெம் வேறொன்றுக்குத் தக வல்களை அனுப்பும் போது நேரச்சீர் மையைக் கடைப்பிடிக்கலாம்.

Atanasoff-Berry Computer (ABC) : அடனாசோஃப்-பெர்ரி கணினி : முதல் மின்னணு கணினி. டாக்டர் ஜான் வின்சென்ட் அடனாசோஃப் மற்றும் கிளிஃபோர்டு பெர்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. தகவல் சேமிப்பு மற்றும் கணிப்பு களுக்கு வெற்றிடக் குழாய்களைப் பயன்படுத்தியது,

Atanasoff John v : அடனாசோஃப் ஜான் வி : 1939இல் தன் உதவியாளர் கிளிப்ஃபோர்டு பெர்ரி உதவியுடன் முதல் மின்னணுவியல் இலக்கக் கணினியைக் கண்டுபிடித்தவர். கணிதப் பிரச்சினைகளுக்குக் கணினி யில் தீர்வு காண்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.

Atari: அட்டாரி : தனியார் கணினிகள் மற்றும் இணைப்புச் சாதனங்கள் வரி சையில் பிரபலமானது. கம்பெனி துவக்கத்திலிருந்தே அமெரிக்க நிறு வனமாக உள்ளது.

atlas: அட்லாஸ் : டிரான்சிஸ்டர்களை வைத்து உருவாக்கப்பட்ட இரண் டாம் தலைமுறை கணினிகளில் பிரபலமானது.

ATM: ஏடிஎம் : தன்னியக்கப் பணப் பொறுப்பு எந்திரம் எனப் பொருள்படும். Automatic Teller Machine என்பதன் குறும்பெயர்.

atom: ஆட்டோம் : தகவல் அமைப்பு களை உருவாக்குவதற்கான அடிப் படை அலகு. கோப்பில் உள்ள ஒரு ஏடு போன்றது. அதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

autoflow : முன்னோட்டம் : ஒரு பக்கத் திலிருந்து அடுத்த பக்கத்திற்குப் போதல் அல்லது வரைகலை உருவத் தைச்சுற்றிவரிகளைப் பொருத்துதல்.

autofont : தன்னியல்பு எழுத்துரு : தானே பயிற்சியளிக்கும் ஓசி ஆர். பல தரப்பட்ட ஆவணங்களை விரைவாக வும் துல்லியமாகவும் படிக்க வசதி யான பல்வேறு வகையான எழுத் தமைப்புகளுக்கேற்ப இது தன்னை சரிசெய்து கொள்கிறது.

atomic operation : அணுச்செயல் : மேலும் சிறிய செயல்களாகப் பகுக்க முடியாத செயல்.

atomic indivisible : பகுக்க இயலா அணுத்தன்மையுள்ள : ஒரு அணுச் செயல் அணுத்தன்மை என்றால் ஒரு செயலை முழுவதுமாகச் செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும். சான்றாக, எந்திரக் கோளாறின் காரணமாக, ஒரு பரிமாற்றம் முடிவது தடைபடு மானால், கணினி அமைப்பு அந்தப் பரிமாற்றம் ஆரம்பத்தில் இருந்த நிலைக்கு மீண்டும் சென்று விடும்.

atomicity: அணுத்தன்மை : எதையும் எந்த அளவுக்குப் பகுக்கலாம் என்ப தைக் கூறுவது.

attach : இணை : கணினி ஒன்றின் திறனைக் கூட்ட புறச் சாதனம் ஒன்றைச் சேர்த்தல்.

attached processor: இணைக்கப்பட்ட செயலி : வேலைகளைச் செய்வதில் உதவுவதற்காக ஒரு தலைமை கணினியுடன் இணைக்கப்பட்ட செயலி. பல் செயலாக்கச் சூழ்நிலை யில், தலைமை செயலக அமை