பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

value add

708

VDI


 value added service:மதிப்புக்கூட்டிய சேவை : தகவல் தொடர்புத் துறையில் பயன்படுத்தப் படும் ஒரு சொல்.சாதாரணமாக அமைப்பில் அதற்கு முன்பு வழங்கப்பட்டதை விட கூடுதலாக தகவல் தொடர்பு இணைப்பில் வழங்கப்படும் சேவைகள் அல்லது ஆரம்பங்களுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. பொது அமைப்பும் இதை வழங்கலாம் அல்லது பொது அமைப்பின் துணை ஒப்பந்தக் காரராக வேறொரு நிறுவனமும் இதை வழங்கலாம்.

vapourware : ஆவிப்பொருள் :ஒரு உற்பத்தியாளர் அல்லது உருவாக்கு பவரிடமிருந்து நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் வன்பொருள் அல்லது மென்பொருளைக் குறிப்பிடும் சொல். அது இருக்கிறது என்றே எவரும் நம்ப மாட்டார்கள் என்பதால் அதை ஆவி என்று கூறப்படுகிறது.

variable : மாறி, மாறியல்; மதிப்புரு ; மாறுவகை : ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது. இதனை தகவல் வகை என்றும் கூறுவர்.

variable length record : மாறு நீளப் பதிவேடு : ஒரு கோப்பிலுள்ள பதிவேடு. இதிலுள்ள பதிவேடுகள் நீளத்தில் ஒரே மாதிரியாக இரா. இது நிலை நீட்சிப் பதிவேடு என்பதிலிருந்து மாறுபட்டது.

variable length field : மாறு நீளப்புலம் : பல்வேறு நீளங்களுடைய மதிப்புகளைக் கொண்டிருக்கும் புலம்.

variable name: மாறியின் பெயர்: ஒரு செயல்முறையில் ஒரு தகவல் மதிப்பளவை அடையாளங் காட்டும் எழுத்தெண் சொல். இது, மதிப்பளவு களின் தொகுதியில் எந்த மதிப்பையும் எடுத்துக் கொள்ளலாம்.

variable word length: மாறியல் சொல் நீளம் : இது ஓர் எந்திரச் சொல் அல்லது இயக்கப்படு எண் தொடர் பானது. இதில், துணுக்குகள், எட்டியல்கள், எழுத்துகள் ஆகியவற்றில் மாறியல் எண்ணிக்கை அடங்கியிருக்கும். இது நிலைச் சொல்நீட்சி என்பதிலிருந்து வேறுபட்டது.

variable register : மாறிப்பதிவகம்: ஒரு மாறியின் மதிப்பை இருத்தி வைக்கும் பதிவகம்.

variation : மாறுபாடு.

varname (Variable name) : மாறி பெயர் : variable name என்பதன் குறும்பெயர். ஒரு மாறியின் பெய ரைக் குறிப்பிடும் சுருக்கம்.

VAX : வாக்ஸ்: பெரிய நுண்கணினிப் பொறியமைவுகளுக்கான பெயர். இதனை எண்மானச் சாதனக் கழகம் தயாரிக்கிறது.

VCR : விசிஆர் : Video Cassettee Recorder என்பதன் குறும்பெயர். ஒளிக் காட்சி நாடாவில் பதிவு செய்து, திரும்ப இயக்கும் எந்திரம். சி.ஆர்கள், அடிப்படையில் அனலாக் பதிவு எந்திரமாக இருந்தாலும் ஏற்பிகளின் மூலம் கணினிக்கு உதவ எண்தகவல்களை அதில் பதிவு செய்ய முடியும்.

VDE :விடிஈ : Video Display Editor என்பதன் குறும்பெயர். எரிக் மேயர் எழுதிய வேர்டுஸ்டார், வேர்டு பர்ஃபக்ட் ஏற்பு சேர் பொருள் சொல் செயலகம்.

VDI : விடிஐ: Virtual Device Interface என்பதன் குறும்பெயர். சாதன