பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video gam

713

video text




ஆடும் ஆட்டம். சொந்தக் கணினி களிலும், கேளிக்கை விடுதிகளிலும் இது மிகுதியாக ஆடப்படுகிறது.

video game machine : ஒளிகௌகாட்சி விளையாட்டுப் பொறி : ஒரு ஒளிக் காட்சி விளையாட்டில் காட்சியைக் கட்டுப்படுத்தும் சைகைகளை உண்டாக்குகிற சாதனம்.

video gate array: ஒளிக்காட்சி வாயில் வரிசை: பி.சி.க்களின் ஒளிக்காட்சிக் கணினியில் உள்ள ஒரு சிப்பு. வண்ணத்தட்டுப் பதிவுகள் உள்ளிட்ட பல கட்டுப்பாட்டு மற்றும் நிலைப் பதிவேடுகளை அது கொண்டிருக்கிறது.

video generator : ஒளிக்காட்சி உருவாக்கி : ஒளிக்காட்சியை உருவாக்கும் சாதனம்.

video graphics board : ஒளிக்காட்சி வரைகலைப் பலகை : வி.சி.ஆர் அல்லது படப்பிடிப்புக் கருவியில் இருந்து ஒளிக் காட்சியை ஏற்றுக் கொண்டு சொற்பகுதி மற்றும் வரை கலையை உருவாக்கும் ஒளிக்காட்சி அட்டை.

video input camera : ஒளிக்காட்சி உட்பாட்டு ஒளிப்பதிவுக்கருவி : ஒரு கணினியின் நினைவகத்தில், (ஒளிப் படங்கள், இயல்பு வாழ்க்கைச்சூழல்கள், ஓவியங்கள்) புள்ளி உருக்காட்சிகளாக மாற்றுகிற ஒளிப்பேழை ஒளிப் பதிவுக் கருவி. இலக்கமாக்கப்பட்ட உருக்காட்சி களை ஒரு காட்சித் திரையில் காட்டலாம் அல்லது வரைகலை அச்சுப்பொறி மூலம் காகிதத்தில் அச்சடிக்கலாம்.

video monitor : ஒளிக்காட்சித் திரை: செயல்முறையில் ஒரு தொலைக்காட்சி போன்ற சாதனம். இதில் அலைவரிசைகளைத் தேர்ந்தெடுப் பதற்கான வசதி இல்லை. ஒளிக்காட்சி முனையை விசைப்பலகை போன்ற ஒரு புறநிலை ஆதாரத்தி லிருந்து இது பட சைகைகளைப் பெற்றுக் கொள்கிறது.

video overlay card: ஒளிக்காட்சி மேல் மூடி அட்டை : என்.டி.எஸ்.சி ஒளிக்காட்சியையும் கணினி உருவங்களையும் கலப்பதற்கு அனு மதிக்கும் வரைவியல் கட்டுப்படுத்தி.

video RAM : ஒளிக்காட்சிராம்: கணினி காட்சித் திரையால் ஏகபோகமாகப் பயன்படுத்தப் படும் ராமின் பகுதி. மையச்செயலகத்திற்கு தேவைப்படு வது போன்று ஒளிக்காட்சி ராமைப் புதுப்பிக்கிறது. அதுபோல, திரை உருவங்களை ஒளிக்காட்சிராம் புதுப் பிக்கிறது. ஒளிக்காட்சி ராமில் நேரடி அணுகல் சேர்ப்பி மொழி ஆணைத் தொடரின் மூலம் நடைபெறும்.

video signal : ஒளிக்காட்சி சைகை : ஒரு CRTஇல் ஒவ்வொரு புள்ளியின் அமைவிடத்தையும், ஒளித்திறனை யும் குறித்துக் காட்டுகிற தகவல்கள் அடங்கிய மின்னியல் சைகை. அத்துடன் ஒரு திரையில் உருக்காட்சி யைக் காட்டுவதற்கான நேரச் சைகை களையும் கொண்டிருக்கும்.

video terminal : ஒளிக்காட்சி முனையம் ': உள்ளிட்டுக்கு ஒரு விசைப் பலகையையும், வெளி யீட்டுக்கு ஒரு காட்சித் திரையையும் பயன்படுத்தும் தகவல் நுழைவுச் சாதனம். காட்சித் திரை தொலைக்காட்சி போல தோன்றினாலும், தொலைக்காட்சி ஒளிக்காட்சி சமிக்ஞைகளை அது ஏற்பதில்லை.

videotext : ஒளிக்காட்சி வாசகம் : ஒன்றுக்கொன்று செயல்புரியும் மின்னணுத் தகவல் பொறியமைவு. இது தொலைவாசகம் போன்றது. இதில், தகவல்களைப் பொறியமை