பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/730

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

world wid

728

Write


டுக் கணினிக் கல்வி மாநாடு. இது வெவ்வேறு நாடுகளில் நான்காண்டு களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

world wide web : வையவிரிவலை; உலகளாவிய வலை.

worm ; புழு ;பெருக்கி: தன்னைத் தானே இரட்டிப்பாக்கிக் கொள்ளும் ஒரு ஆணைத்தொடர். முனையப் பெருக்கி மிகப் புகழ் பெற்றது. இணையத்தில் இது தன்னைப் பெருக்கிக் கொள்கிறது.

Wozniak, Stephen : ஒஸ்னி யாக், ஸ்டீபன் : ஆப்பிள் கணினிக் கழகம் என்ற அமைவனத்தின் கூட்டு நிறுவனர் Apple ILa, மெக்கின்டோஷ் போன்ற பல நுண்கணினிப் பொறியமைவுகளை உருவாக்கியவர்.

WP : டபிள்யூ பி : சொல் செய்முறைப் படுத்துதல் என்று பொருள்படும் word processing என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

WPM : டபிள்யூபிஎம் : வினாடிக்கு எத்தனை சொற்கள் என்று பொருள்படும் Word Per Minute என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். தகவல் அனுப்பீட்டு வேகத்தின் அளவு.

WPS : டபிள்யூ பிஎஸ் : சொல் செய் முறைப்படுத்தும் கழகம் எனப்பொருள்படும் Word Processing Society என்பதன் தலைப்பெழுத்துச் சுருககம.

wraparound : சுற்றுப்பொதிவு: மிகப் பெரிய முகவரியிடத்தக்க அமைவிடத்திலிருந்து முதல் முகவரியிடத் தக்க அமைவிடத்துக்கு மாற்றுதல், காட்சிச் சறுக்கு நகர்வினை கடைசி எழுத்து நிலையிலிருந்து முதல் எழுத்து நிலைக்கு மாற்றுதல் போன்ற தொடர் செயற்பாடு.

wrist support: மணிக்கட்டு ஆதரவு: கைகளை மணிக்கட்டு நரம்பு நிலையில் வைத்துக் கொள்வதன் மூலம் கார்ப்பல் டன்னல் நோய்க் குறியைத் தடுத்துப் பாதுகாக்கும் பொருள்.

wrist rest : மணிக்கட்டு தங்குமிடம்: தட்டச்சு செய்பவர்கள் தங்களது கை மணிக்கட்டினை உயர்த்தி விசைப் பலகை அளவுக்கு வைத்துக் கொள்ளும் மேடை.

write : எழுது: 1. தகவல்களை கணினி யிலிருந்து ஒரு வெளிப்பாட்டுச்