பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

write bac

729

Write to


 சாதனத்திற்கு மாற்றும் செய்முறை. 2. உள்முகச் சேமிப்பகத் திலிருந்து துணைநிலைச் சேமிப்புச் சாதனங் களில் தகவல்களைப் படியெடுத்தல். இது படி என்பதிலிருந்து மாறுபட்டது. 3. விண்டோஸ் 3.x தொகுப்புகளில் இணைக்கப்பட்டிருந்த ஒரு சொல் செயலி (Word Processor).

write back cache : திருப்பி எழுதும் விரைவி : எழுதுவதைக் கையாளும் வட்டு அல்லது நினைவக விரைவி. அதிவேக விரைவி நினைவகத்திற்கு மையச் செயலகத்தில் இருந்து எழுதப்பட்ட தகவல்கள், எந்திரம் வேலையின்றி இருக்கும் நேரத்தில் வட்டுக்கோ அல்லது நினைவகத்திற்கோ திருப்பி எழுதப்படுவது.

write enable ring : எழுத உதவும் வளையம் : ஒரு நாடாச் சுருளில் தகவல்களைப் பதிவு செய்வதற்கு முன்பு அந்த நாடாச்சுருளில் பொருத் தப்படும் பிளாஸ்டிக் வளையம்.

write error :எழுதும் பிழை; ஊடகத்தில் ஏதாவது ஒரு கோளாறின் காரணமாக தகவல்களை நினைவகம் அல்லது சேமிப்பகச் சாதனத்திற்கோ அல்லது அதிலிருந்தோ பதிய முடி யாத நிலை. நினைவகச் சாதனங்களில் மின்னணு சாதனங்களின் கோளாறுகளாலும் இவ்வாறு ஏற் படுவதுண்டு.

write head : எழுது முனை : சாதனங் களுக்குள் தகவல்களை எழுதுவதற்காக வடிவமைக்கப்பட்ட காந்த முனை. இது படிப்பு முனை என்பதிலிருந்து மாறுபட்டது.

write inhibit ring :எழுத்துத் தடுப்பு வளையம்; எழுதவிடா வளையம்: ஒரு காந்தநாடாவில் தகவல்களை எழுதுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வளையம். இது படிப்புக்காப்பு வளையம் என்பதிலிருந்து வேறுபட்டது.

write protect : எழுதவிடா படிப்புக் காப்பு : ஒரு வட்டில் அல்லது நாடா வில் எழுதுவதைத் தடுப்பதற்கான நடைமுறை.

write protection : எழுதவிடாப் பாதுகாப்பு: முக்கிய தகவல்கள் மற்றும் செயலாக்க அமைப்பு போன்ற ஆணைத் தொடர்களில் தற்காலிக மாகவோ அல்லது வேண்டு மென்றோ மாற்றம்/நீக்கல் ஆவதைத் தடுக்கப் பயன்படுத்தும் துட்பம். வன்பொருளில் எழுதவிடாப் பாதுகாப்பு அளிக்க முடியும். சான்று: நெகிழ்வட்டில் எழுதவிடாப் பாதுகாப்பு நாட்கள், இரகசியச் சொல் போன்றவற்றின் மூலம் மென் பொருளிலும் பாதுகாப்பு அளிக்கலாம். நிலை வட்டுகளில் கட்டுப்பாட்டு மின்சுற்று மூலம் மட்டுமே எழுதவிடாப் பாதுகாப்பு அளிக்க முடியும்.

write-protect notch : எழுதவிடாக் காப்புப் பிளவு : விரும்பத் தகாத தகவல்கள் நெகிழ்வட்டுகளில் (நுண் வட்டுகளில்) பதிவு செய்யப்படுவதி லிருந்து பாதுகாப்பதற்கான குறியீடு. இது, எழுதவிடாத்தடுப்புப் பிளவின் மீது ஒரு பசையிட்ட இழையினை ஒட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது.

write protectring: எழுதவிடாக் காப்பு வளையம் : ஒரு நாடாச் சுருளில் ஒட்டப் பட்டுள்ள காப்பு வளையம். இது, நாடாவில் எழுதுவதைத் தடுக்கிறது. இதனை எழுதவிடாத் தடுப்பு வளையம் என்றும் கூறுவர்.

write protect sensor : எழுதவிடாத் தடுப்புணர்வு.

write to : எழுது.