பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

autopol 15 Availability

autopolling : தானியக்கச் சோதனை : தன்னியக்க பதிவு முறை. இம்முறை யில் கணினி இணையம் ஒன்றின் முனையங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தகவல்களை அனுப்பத் தயார் நிலையில் உள்ளன வா என்பதை அறிய சோதிக்கப்படு கின்றன. கணினி இணையம் ஒன்றில் வன் பொருளும் மென் பொருளும் இணைந்து இச்சோதனையை மேற் கொள்கின்றன.

auto resume : தானே தொடர்தல் : கணினியில் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டுப் பின்னர் தொடர்ந்து அனு மதிக்கும் தன்மை. பயன்பாடுகளை இரண்டாவது தடவை மேலேற்றத் தேவையில்லை. நினைவு விவரங் கள் வட்டில் சேமிக்கப்பட்டோ அல்லது மின்சார பேட்ரியில் தயார் நிலையில் வைக்கப்பட்டோ இருக் கும். மடிக்கணினி மற்றும் நோட்டுப் புத்தகக் கணினிகளில் இத்தன்மை பெரும்பாலும் காணப்படும்.

auto - redial : தானியக்க இணைப்பு சுழற்றி : அழைக்கப்பட்ட தொலை பேசி கிடைக்கும் வரை மீண்டும் எண் சுழற்றுவதற்கான மோடெம் ஒன்றின் சாதனம்.

auto - repeat: தானே திரும்பச் செயல் : சில விசைப் பலகைகளின் பண்புப் படி சில விசைகளை அழுத்தினால் அவற்றின் செயல்கள் தானியக்க முறையில் மீண்டும் செய்யப்படு கின்றன.

auto-restart : தானியக்க மறு துவக்கம் : கருவி பழுதுபட்டாலோ மின்சாரம் தடைப்பட்டாலோ மீண்டும் சீராகும் பொழுது பணிகளைத் தொடரத் தயார் நிலையை அடைவதற்கான நடவடிக்கைகளைத் தானியக்க முறையில் நிறைவேற்றுவதற்கான கணினி ஒன்றின் திறன்.

autosave : தானியங்கிச் சேமிப்பு: பயனாளர் தலையிடாமல் தொடர்ச்சி யான இடைவெளிகளில் தகவல் களை வட்டில் சேமித்தல்.

autoscore : தானியக்கக் கோடிடல் : வார்த்தைச் செயலாக்க முறையில், எழுதப்பட்ட பகுதியில் அடிக் கோடிடுவதற்கான ஆணை.

autosizing : தானே அளவமைத்தல் : ஒரு அமைப்பிலிருந்து வேறு ஒன்றுக்கு மாறும்போது அதே செவ் வக உருவத்தோற்றத்தை வைத்துக் கொள்ளும் முகப்பின் திறன்.

auto-start : தானே துவக்குதல் : சில வணிக நுண் கணினிகளில் ரோம் நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு, கணினியை இயக்கிய வுடன் இது செயலாக்க அமைவை மேலேற்றி பயன்பாட்டுத் தொகு தியை எந்திரத்தில் அனுப்பி, உடனே செயல்படத் தயாராக்கும். இவ் வசதியை விளக்கும் சொல் Turkey.

autostart routine : தானே துவக்கும் நிரல் : கணினியில் அமைக்கப்பட்ட ஆணைகள் கணினியை இயக்கத் துவங்கியவுடன் அவைகளும் செயல் படத் துவங்கும். கணினி நினை வகத்தைச் சோதித்தல் போன்ற கண்டறி சோதனைகளை நடத்தி இயக்க அமைப்பை ஏற்றி கட்டுப் பாட்டை அதற்குக் கொடுக்கும்.

available list : கிடைக்கும் பட்டியல்: ஒதுக்கப்படாத பகுதிகளின் பட்டி யல் என்றும் அறியப்படும்.

available point : கிடைக்கும் இடம் : கணினி முகப்பில் திரையில் உள்ள ஒரு இடம்.

Availability : கிடைப்பு நிலை : குறிப் பிட்ட செயலுக்கான மணி நேரத்துக் கும், வன் பொருளின் சரியான