பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bank 81 bar pri

அதிக அலைவரிசைக்கும், குறைந்த அலை வரிசைக்கும் உள்ள வேறு பாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்ற அளவை முறையில் ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தைக் குறிப்பிடுவது.

bank : வங்கி : 1. தகவல் தொடர்பு களில், இரண்டு குறிப்பிட்ட எல்லை களுக்கிடையிலான அலைவரிசை களின் பரப்பு. 2. செயல்பாட்டின் பரப்பு அல்லது தன்மை . 3. வட்டு அல்லது உருளை போன்ற இருமுக சாதனத்தில் வட்டமான பதிவு செய் யும் வழித்தடங்களின் தொகுதி.

banked memory: சேமிக்கப்பட்ட நினை வகம் : வழக்கமான 64கே ராம் நினை வகத்தை அதிகப்படுத்தும் முறை. முகவரியிடலில் ஏற்படும் குழப் பத்தைத் தவிர்க்க துண்மி நுண் செய லகங்களில் இருந்து மேலும் பெரிய அளவுள்ளவற்றுக்கு பொதுவாக 1 மீமிகு எட்டியல் உள்ளவற்றுக்கு முகவரியிடுவது. 64கே - வுக்கு மேல் உள்ள அட்டைகளை தேவைப்படும் போது மட்டும் மென்பொருள் கட்டுப் பாட்டின் மூலம் துவங்கப்படும்.

banking software : வங்கியியல் கணினிச்செயல்முறை.

banking through telephone : வங்கி தொலைபேசி வழி வங்கிச் செயல்பாடு.

bank switching : வங்கி மாற்றம் : மின்னணு மின்சுற்றுகளை ஏற்படுத்துதல், நிறுத்துதல். மற்ற அலகுகள் நிறுத்தப் படும்போது ஒன்று மட்டும் செயல் படும். தேவையுள்ள முறையில் எல்லா மின்சுற்றுகளையும் முகவரி யிடுவதையோ; இயக்கப்படுவதை யோ தடுக்கும் கணினி அமைப்பின் வடிவமைப்பு.

barchart : பட்டைவரைபடம் : வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவ லாகப் பயன்படும் வரைபடம். கால அட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது.

barcode : பட்டைக் குறியீடு; பட்டைக் கோடு; பட்டை வரி : வருடியினால் படிப்பதற்காக ஒட்டுச் சீட்டில் பயன் படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடை யாளம் காண பட்டைக் குறியீடுகள் பயன்படுகின்றன. நூல் நிலையங் களில் உள்ள புத்தகங்களையும் இரயில் வண்டி பெட்டிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

bar-code reader : பட்டைக் குறியீடு படிப்புப் பொறி; பட்டைக் கோடு படிப்பான்; பட்டை படிப்பான்; பட்டைக்குறி யீட்டுப் படிப்பான் : பிரதிபலிக்கும் ஒளியின் மூலம் பட்டைக் குறியீடு களைப் படிக்கும் ஒரு ஒளிப்பட மின் சக்தி வருடி.

bar-code scanner: பட்டைக் குறியீடு வருடி : இணையான பட்டைகளின் வடிவத்தில் பதிவு செய்யப்பட்ட எழுத்துகளைக் கொண்ட பொருள் களின் தகவலைப் படிக்கக்கூடிய ஒளிச் சாதனம். இருப்பு வைப்பதற் காகவோ அல்லது செயலாக்கத்திற் காகவோ எழுத்துகள் இலக்க சமிக் ஞைகளாக மாற்றப்படுகின்றன.

bar code wand : பட்டைக்குறியீட்டுக் கோடு.

bare board: வெற்று அட்டை வெறும் பலகை : எந்த ஒரு மின்னணுச் சாதன மும் இல்லாத அச்சிட்ட மின்சுற்று அட்டை .

bar printer: அட்டை அச்சகம் : வரியின் குறுக்கே அடுத்தடுத்து நிற்க வைக்கப் பட்ட பல பட்டைகளைப் பயன் படுத்தி அழுத்தி அச்சிடும் சாதனம்.