பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

baud 85 bebugging

baud : செய்தி வேகம் : தகவல் அனுப் பப்படும் வேகத்தைக் கண்டறியும் அலகு.

Baudot code : பாடாட் குறியீடு : ஒரு எழுத்தை ஐந்து துண்மிகள் மூலம் குறிப்பிட்டு தகவல்களை அனுப்பும் ஒரு குறியீட்டு முறை. பல தொலை அச்சு அமைப்புகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. பன்னாட்டு தந்தி முறை குறியீட்டு எண் என்றும் அழைக்கப்படுகிறது. 1950 இல் இந்த குறியீட்டு முறையே பன்னாட்டுத் தந்தித் தொடர்புக்கான தர நிர்ணயங் களில் ஒன்றாக ஆகிவிட்டது.

Baudot Emile : பாடாட் எமிலி : பாடாட் குறியீட்டு முறையை 1880 இல் கண்டுபிடித்த தந்தி முறையில் அச்சிடுதலில் முன்னோடி.

baud rate : செய்தியனுப்பும் வேக விகிதம்: தகவல் அனுப்புதலின் வேகத் தின் அளவுமுறை. ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகளுக்குச் சமம் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒவ் வொரு எழுத்துக்கும் 8 துண்மி தேவைப்படுகிறது. ஃபிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளரான ஜே.எம்.இ. பாட் என்பவரின் பெயர் இடப் பட்டது.

Baum.I.Frank : பாம் எல் . ஃப்ராங்க் : எந்திரங்களை ஒரு நன்மை தரும் சக்தியாகக் கருதி இந்த நூற்றாண்டின் நன்னம்பிக்கையில் பங்கேற்றவர். அவரது புகழ்பெற்ற ஓஇஸட் வரிசை நூல்களில் வரும் டிக்டாக் என்பவன் கடிகாரம் போன்று வேலை செய்யும் பித்தளை மனிதன். சொல்லி வைத் ததை எப்போதும் எந்தச் சூழ்நிலை யிலும் செய்யக் கூடியவன்.

bat : வளைவு : மின்னணு சாதனங் களைப் பொருத்தக்கூடிய அலமாரி அல்லது அடுக்கு. கருவிகளின் வளைவு என்றும் அழைக்கப் படுகிறது.

BCD : பிசிடி : Binary Coded Decimal என்பதன் சுருக்கப் பெயர்.

BCS : பிசிஎஸ்: இங்கிலாந்தின்கணிப் பொறி சங்கம் எனப்படும் தொழில் முறை சங்கம். British Computer Society என்ற பெயரின் குறும் பெயர்.

BDOS : பிடிஓஎஸ் : Basic Disk Operat ing system என்பதன் குறும் பெயர். சில செய் முறை அமைப்புகளில் ஒரு குறிப்பிட்ட வட்டு இயக்கிக்கு ஏற்ப சரிப்படுத்தும் அந்த அமைப்பின் பகுதி.

beacon : பீகன் : ஒரு கட்டமைப்பில், ஒரு முனையில் இருந்து அனுப்பப் படும், கட்டமைப்புச் சிக்கல் பற்றிய அபாய செய்தி.

beaconing : பீகனிங் : ஒரு வளாக பிணையமாகிய லேனில் (Lan) தவ றான நிலைகளை சமிக்ஞை மூலம் அனுப்புதல்.

bead : பிட்கள் : ஆணைத் தொடரின் ஒரு சிறிய துணை நடைமுறை. பல பீட்கள் ஒன்று சேர்ந்தால் 'நூல்' (த்ரெட்) எனப்படும். கோஆக்சியல் கம்பியில் இன்சுலேட்டரைச் சுற்றி யுள்ள உள்கம்பி. தகவல் தள ஆவ ணத்தில் தேவையின்றி முன்னால் செல்வது.

beampenetration CRT : பீம் உட்செலுத் தும் சி ஆர்ட்டி : நிறத்தை உருவாக்கும் நெறியக் காட்சித் திரை அமைப்பு. சிகப்பு மற்றும் பச்சை கந்தகம் பூசப் பட்ட திரையில் செலுத்தப்படும் மின்னணு ஒளிக்கற்றை.

bebugging: பிழை ஏற்படுத்துதல் : ஒரு ஆணைத் தொடரில் தெரிந்த பிழை களையே ஏற்படுத்தி, மாணவ ஆணைத் தொடர் எழுதுபவர்களின்