பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

beenet 86 Bernoulli

பிழை நீக்கும் விகிதத்தை சோதிப் பதற்கான பன்னாட்டு முறை.

beenet : பீனெட் : ஒரு லேன் (Lan). இதில் தகவல் அனுப்புதல் வேகம் ஒரு நொடிக்கு ஒரு மீமிகு எட்டியல்.

beep : பீப் : விளி : ஒரு கணினியின் ஒலி பெருக்கி ஏற்படுத்தும் ஓசை. சில கணினி ஒலிபெருக்கிகளில் ஒரு ஓசையை ஏற்படுத்துவதற்காக சில ஆணைத் தொடர் மொழிகளில் உள்ள ஒரு ஆணை.

beginning of tape marker : நாடா காட்டியின் ஆரம்பம் : காந்த நாடா வின் ஒரு புள்ளியைக் காட்டும் அடை யாளம். அங்கிருந்துதான் பெரும்பா லும் தகவல் துவங்கும்.

behaviour: நடத்தை : நோக்கம் சார்ந்த ஆணைத் தொடரில் ஒரு பொருள் எவ்வாறு வினையாற்றுகிறது, எதிர் வினையாற்றுகிறது என்பதை அதன் நிலைமாற்றங்கள் மற்றும் செய்தி அனுப்புதலின் மூலம் அறியலாம்.

Bell 103 : பெல் 103 : 300 செய்தி வேகம் (Baud) மோடம்களின் தர நிருணயம்.

Bell 212A : பெல் 212ஏ : 12கேபி செய்தி வேக மோடெம்களின் தர நிருணயம்.

Belllaboratories: பெல் ஆய்வகங்கள்: ஏட்டி அண்டு ட்டி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம். உலகப் புகழ் பெற்றது. பல கணினி வன்பொருள் மென்பொருள் கோட்பாடுகள் மற் றும் ஆணைத் தொடர்கள் பெல் ஆய் வகங்களில் உருவாக்கப்பட்டன.

bells and whistles : மணிகளும் சீட்டிகளும் : வரைபடத் தொகுப்பு, வண்ணக் காட்சித் திரைகள், ஓசை மற்றும் பிற வெளிப்புற உறுப்புகள் உள்ளிட்ட ஒரு கணினி அமைப்பில் சில அல்லது கூடுதலான அம்சங் களை விருப்பம் போல் விளக்குவது.

belt - bed plotter : வார்ப்ப ட்டை வரைவி : காகிதத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க தொடர் பெல்ட்டைப் பயன்படுத்தும் எழுது கோல் வரைவி.

BEMA : பிஈஎம்ஏ: Business Equipment Manufacturer's Association என்ப தன் குறும்பெயர்.

benchmark : திறன் மதிப்பு: தரஅளவு; மதிப்பீடு செய்தல்: ஒரு கணினியின் செயல் திறனை மதிப்பீடு செய்ய ஒரு ஆணைத் தொடரைப் பயன்படுத்து வது போன்ற அளவீடுகளைச் செய் வதைக் குறிப்பிடும் சொல். பொருள் களை ஒப்பீடு செய்ய உதவும் ஒரு தர நிருணயம்.

benchmark programme : தரநிருணய ஆணைத்தொடர்: மதிப்பீட்டு ஆணைத் தொடர்: ஒரு கணினியின் திறன் மற்றும் பிற அளவைகளை மதிப் பிடும் ஆணைத் தொடர்.

benchmark problem : திறன் மதிப் பீட்டுச் சிக்கல் : இலக்கவியல் கணினி களின் செயல் திறனை ஒப்பிட்டு, மதிப்பீடு செய்ய வடிவமைக்கப் பட்ட சிக்கல்.

benchmark test : திறன் மதிப்பீட்டுச் சோதனை : முழு செயல் வேகத் திறமையை ஒப்பிடுவதற்காக பல் வேறு கணினிகளில் இயக்கப்படும் ஒரு கணினி ஆணைத் தொடர். குறிப் பிட்ட பயன்பாட்டு சூழ்நிலையில் கணினிக் கருவியின் செயல் திறனை அளக்கப் பயன்படுத்தப்படும் சோதனை.

Bernoulli cartridges : பெர்ன வுலி பேழைகள் : நிலைவட்ளடு மற்றும்