பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Big 88 binary

Big Blue : பிக்புளூ : ஐபிஎம் நிறு வனத்தின் இன்னொரு பெயர். ஒரு வேறுபாடான நீல வண்ணத்தை அதன் கணினிகள் மற்றும் பிற கருவி களில் அந்த நிறுவனம் பயன்படுத்து வதால் இப்பெயர் ஏற்பட்டது.

billion : பில்லியன் : ஓராயிரம் மில்லி யன் : நூறு கோடி.

bin : கூடை : வெற்றுக் காகிதம் அல்லது முன்பே அச்சடிக்கப்பட்ட படிவங்களைப் படித்துக் கொள்ள அச்சுப் பொறியில் உள்ள ஒரு தட்டு. முடிந்த வேலையை வாங்கிக் கொள் வதற்கும் கூடை பயன்படுத்தப்பட லாம். நிலைவட்டில் பலவகைப் பொருளுக்கான பட்டியல் செய லாக்க அமைப்பு மற்றும் சேவை ஆணைத் தொடர்கள் இதில் இடம் பெறும்.

BINAC : பினாக் : Binary Automatic Com - puter என்ற கணினியின் குறும் பெயர். 1949ஆம் ஆண்டு எக்கார்த் மாக்லி நிறுவனம் உருவாக்கியது.

binaries : இரும எண்கள் ; ஈரிலக்க முறை : எந்திர மொழியில் இயங்கக் கூடிய ஆணைத் தொடர்கள்.

binary : இருமை : 2-ஐ அடிப்படை யாகக் கொண்ட எண்முறை அல்லது ஒரு தன்மை அல்லது பொருள் தேர்ந் தெடுத்தல் உள்ளடக்கியது. இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ள ஒரு சூழ்நிலை.

binary arithmetic : இருமக் கணக்கு ; ஈரிலக்கக் கணக்கு : 1. பதின்ம எண் முறைக்குச் சமமான கணக்கீட்டு முறை. ஆனால், இதில் 0,1 ஆகிய இரண்டு இலக்கங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. 2. ஒரே நேரத்தில் இரண்டு மதிப்புகளை மட்டுமே வைத்து எல்லா கணக்கு களும் செய்யப்படுவதைக் குறித்தல்.

binary card : இரும எண் அட்டை : தரமான துளை அட்டை 0 அல்லது 1 -ஐக் குறிப்பிட 12 வரிசைகளில் 80 பத்திகளில் 960 துளை யிடும் இடங்களைக் கொண்டது.

binary code : இருமக் குறியீடு; ஈரிலக் கக் குறியீடு : எந்தத் தகவலையும் துண்மிகள் 0 அல்லது 1இன் மூலமே குறியீடு செய்யும் குறியீட்டு முறை 8ASCII மற்றும் EBCDIC போன்ற இரண்டு முறைகளில் இவை பயன் படுத்தப்படுகின்றன . 0 என்றால் நிறுத்து. 1 என்பது இயக்கு.

binary coded character : இருமக் குறியீட்டு எழுத்து : எண் குறியீட்டு முறையில் ஒன்று. இதில் பதின்ம இலக்கங்கள், எழுத்துகள், சிறப்புக் குறியீடுகள் ஆகியவை, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட, தொடர்ச்சி யான இருமை இலக்கங்களினால் குறிப்பிடப்படும் எழுத்து - எண் கொண்ட குறிகளைக் குறிப்பிடு கிறது.

binary coded decimal; (BCD) : இருமக் குறியீட்டுப் பதின்மம் ; பிசிடி : ஒரு வகையான கணினி குறியீட்டு முறை. இதில் ஒவ்வொரு பதின்ம இலக்க மும் 1-க்கள் 0-க்கள் கொண்ட நான்கு இலக்கத் தொகுதியால் குறிப்பிடப் படுகின்றன.

binary coded decimal inter change code : இருமக் குறியிட்டு பதின்ம மாற்றக் குறியீடு : 64 எழுத்து மாற்ற வசதி கொண்ட துேண்மி உள்ளீட்டுக் குறிப்பீடு.

binary coded decimal number : இருமக் குறியீட்டு பதின்ம எண் : நான்கு எண்களைக் கொண்ட தொடர்ச்சியான இரும எண் தொகுதி கள். பதின்ம எண்ணில் குறிப்பிடப் படும் மதிப்புக்குச் சமமானது என்று