பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bit map 93 bit pat

bit map : துண்மி நிலைப்பிடம் : 1. கணினியில் வரைபடங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இருப்பிடப் பகுதி. தொடர்ந்து காட்சித் திரைக்கு படத்தை அனுப்பி வருவது. 2. துண்மிகளின் வரிசை நின்றோ இயங்கியோ செயல்படுவதை ஒட்டி பிற பொருள்களின் வரிசை மாற்றம் அடைதல்.

bit map font : துண்மி எழுத்துரு : துண்மி முறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் அச்செழுத்து. பொதுவாக இதை அளவு மாற்றவோ சுழற்றவோ முடியாது. ஒரு குறிப் பிட்ட அளவுமுறையில் உள்ள எழுத்து களின் தொகுதி. ஒவ்வொரு எழுத்தும் தனித்தனி முறையிலான புள்ளிகளை உடையது. துண்மி மூலம் உருவான திரை அல்லது அச்சுப்பொறியின் அச் செழுத்துகள் புள்ளிக் கணக்குகளா லான எழுத்துகளைக் கொண் டிருக்கும்.

bit mapped display : துண்மிப்படமாக் கியக் காட்சி : திரையில் உள்ள ஒவ் வொரு படப் புள்ளியும் ராமில் உள்ள ஒரு நினைவகப் பகுதியுடன் தொடர்புபடுத்தும் காட்சித் திரை.

bit-mapped graphics : துண்ம பட மாக்கிய வரைகலை : திரையில் உள்ள படப் புள்ளிகளுக்கும் நினைவகத்தில் உள்ள துண்மிகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்றான தொடர்பை ஏற் படுத்துவதன் மூலம் திரையில் உருவங்களை உண்டாக்கும் முறை. வண்ண வரைகலைகளில், சிவப்பு, பச்சை மற்றும் நீலநிற படப்புள்ளி களை துண்மி நிலப்பட முறையில் உருவாக்க மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட துண்மிகள் தேவைப் படும். சில ஸ்கேனர்களிலும் ஓவிய ஆணைத் தொடர்களிலும் துண்மி நில வரைகலைகள் உருவாக்கப்படு கின்றன.

bit mapped screen : துண்மி மாக்கிய திரை : கணினியின் ராமில் ஒவ்வொரு நினைவக இடத்திற்கும் தொடர்புள்ள புள்ளிகளைக் கொண்ட காட்சித் திரை. ஒவ்வொரு புள்ளியுடன் தொடர்புள்ள நினைவக இருப்பிடத்தை ஒட்டி புள்ளிகளை இயக்கவோ, நிறுத்தவோ செய்ய முடியும்.

bit mapping : துண்மி படமாக்கல் : துண்மிகளின் புள்ளிகள் குழுக் களைப் பயன்படுத்தி அகர வரிசை எழுத்து அல்லது வரைகலை உரு வத்தை உருவாக்குதல்.

bit mask : துண்மி மூடி : ஒரு பதிவகம் மற்றும் மாறியின் உள்ளடக்கத்தை சோதனை செய்யப் பயன்படுத்தப் படும் துண்மிகளின் தொகுதி.

bit matrix: துண்மி அணி: இருபரி மாண அணி இதன் உறுப்புகளாக இரும இலக்கங்களாகிய 0 அல்லது 2 மட்டும் வரும்.

bit operations : துண்மி செயல்பாடுகள் : தகவலுக்குள் குறிப்பிட்ட துண்மிகளை மட்டும் படிக்கும் அல்லது மாற்றும் ஆணைத் தொடர் செயல்பாடுகள்.

bit oriented protocol : துண்மி சார்ந்த நெறிமுறை : தகவல் துண்மிகளின் தனித்தனி குழுக்களைப் பிரிக்கப் பயன்படும் துண்மி அமைப்பு.

bit parallel : துண்மி இணை : பல துண்மிகளை ஒரே சமயத்தில் அனுப் புதல். ஒவ்வொரு துண்மியும் கம்பித் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கம்பி வழியாகச் செல்லும்.

bit pattern : துண்மி அமைப்பு: குறிப் பிட்ட எண்ணிக்கையுள்ள ஒரு