பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

block sor 97 board

blocksort : தொகுதியாகப் பிரித்தல் : ஒரு கோப்பினை தொகுதி தொகுதி யாகப் பிரிக்கும் தொழில் நுட்பம். கோப்பு தொடர்பான குழுக்களாகப் பிரிக்கத் தொழில் நுட்பம் பயன் படும்.

block structure : தொகுதி அமைப்பு : தொடர்புடைய அறிவிப்புகள், தொடர்கள் ஆகியவற்றை ஒன்றாகத் தொகுப்பதற்கான ஆணைத் தொட ரின் கோட்பாடு.

block transfer : தொகுதி மாற்றம் : சேமிப்பகத்தின் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தகவல் தொகுதி முழுவதையும் மாற்றுதல்.

blocks world : தொகுதிகள் உலகம்; தொகுதிகள் சூழல் : எந்திர மனிதனி யல் மற்றும் இயற்கை மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தொகுதிகளின் சூழல்.

blow : ஊது உப்பல் : துண்மிகளின் மென் கம்பிகளை ஊதிப்ராம் PROM சிப்புகளில் தகவல் அல்லது குறியீடு களை எழுதுதல். 1 துண்மி தனித்து விடப்படும்.

blowup : தடுத்து நிறுத்து; மிகை உப்பல் : ஒரு பிழை காரணமாகவோ, தன்னால் கையாள முடியாத தகவல் களைப் பெற்ற சூழ்நிலையிலோ ஒரு ஆணைத் தொடர் திடீரென்று நின்று விடுதல்

blue ribbon problem : நீலநாடா பிரச்சினை : முதல் முயற்சியிலேயே சரியாக இயங்கும் கணினி ஆணைத் தொடர். பிழை நீக்க வேண்டிய அவசியமில்லை .

blue ribbon programme : நீல நாடா ஆணைத்தொடர் : முதல் முயற்சியி லேயே மிகச் சரியாக இயங்கி பிழை நீக்கம் செய்யப்பட வேண்டிய தேவையில்லாத ஆணைத்தொடர்.

BMMC : பிஎம்எம்சி : Basic Monthly Maintenance Charge என்பதன் குறும் பெயர்.

BNC : பிஎன்சி : கூட்டு அச்சு கம்பியில் இணைப்புக்காகப் பயன்படுத்தப்படுவது. ஒரு உருளை போல தோன்றும் இந்த பிளக்கின் இரு எதிர்ப் புறங் களும் இரு சிறிய கம்பிகள் இருக் கும். பிளக்கை நுழைத்தவுடன், சாக் கெட்டை இயக்கினால் பிளக்கில் உள்ள கம்பிகள் இறுக்கம் அடை கின்றன.

BNF: பிஎன்எஃப்: Backus Normal Form என்பதன் குறும்பெயர்.

board : அட்டை : அச்சிடப்பட்ட மின் சுற்று அட்டை என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுவது. ஒரு தட்டையான, மெல்லிய, செவ்வக வடிவமுள்ள, கணினியின் ஒரு உறுப்பு. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச் சிடப்பட்ட மின்சுற்று அடுக்கு களைக் கொண்ட வெளிப்புற உறுப்பு. இதில் சிப்புகள் மற்றும் பிற மின்னணு உறுப்புகள் இணைக்கப் படுகின்றன.

board computer : அட்டை கணினி : ஒரு தனி மின்சுற்று அட்டையில்