பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1000

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

999


network theory

ஐஎஸ்டிஎன் தொலைபேசி போன்ற முனைய சாதனங்களுக்கும் இடையே இடைமுகமாய்ச் செயல்படும் சாதனம்.

network theory : பிணையக்கொள்கை : ஒரு மின் பிணையத்தின் உறுப்புகளின் உறுப்புகளை பொதுமைப்படுத்தி வகைமைப்படுத்தல்.

network time protocol : பிணைய நேர நெறிமுறை : ஒர் இணைய நெறிமுறை. இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கணினிகளின் ஒத்திசையா கடிகாரங்களுக்கான நெறிமுறை.

network topologies : பிணைய இடத்தியல்கள் : பயன்படுத்துபவர்களின் இருப்பிடங்கள் மற்றும் பயன்பாட்டுத் தேவைகளைப் பொறுத்து முனைகளை யும் தகவல் தொடர்புகளையும் ஒன்றோடொன்று பிணைத்தல். நட்சத்திர பிணையம், வளைய பிணையம், பல்முனை பிணையம், மர பிணையம், பின்னல் பிணையம் போன்ற பல பிணையங்கள் உள்ளன.

network transport protocol : பிணைய போக்குவரத்து நெறிமுறை.

network virtual terminal : மெய் நிகர் முனையப் பிணையம்.

neumann concept : நியூமன் கோட்பாடு.

neural net : நியூரால் பிணையம்; நரம்பணு பிணையம் : மனித மூளையின் அடிப்படை நினைவாற்றல் அலகு போன்று செயற்படக்கூடிய பல்வேறு செயற்பாடுகளைச் செய்யவல்ல கணித மாதிரி வடிவம். நியூரான் என்பது அடிப்படை நரம்பு உயிரணு ஆகும். ஒரு புழுவின் மூளையில் இந்த உயிரணுக்கள் 1000 வரையில் இருக்கும். மனிதனிடம் 10, 000 கோடி நரம்பு உயிரணுக்கள் உள்ளன. இந்த நியூரான் என்ற சொல்லிலிருந்தே இப்பெயர் வந்தது.

neural network : நரம்பணுப் பிணையம் : மனித மூளையானது தகவலைக் கையாளுதலைக் கற்றுக் கொள்ளல், நினைவில் இருத்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்கிறதோ அதே அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு. மனித நரம்பு மண்டலத்திலுள்ள நரம்பு செல்களான நியூரான்களின் செயல்பாட்டை ஒத்தவாறு இதன் செயல்பாடு அமையும். நரம்பணுப் பிணையம் என்பது சிறுசிறு செயலாக்க உறுப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகும். ஒவ்வோர் உறுப்பும்