பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1004

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

next

1003

NIC


மென்பொருள் உருவாக்க நிறுவனம். இந்த நிறுவனத்தை 1995ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப் யூட்டர் நிறுவனம் விலைக்கு வாங்கியது.

next : அடுத்த.

next computer : நெக்ஸ்ட் கணினி : நெக்ஸ்ட்-இன் நிறு வனத்திடமிருந்து வரும் யூனிக்ஸ் ஏற்பு பணி நிலையக் குடும்பங்கள். 68040 மையச் செயலகத்தைப் பயன்படுத்தி 1120 x 832 பழுப்பு அளவு வண்ண வரைகலை டிஸ்ப்ளே போஸ்ட் ஸ்கிரிப்ட் ஆகியவை உள்ளடக்கியது. 2. 88 மீமிகு எண்மி நெகிழ் வட்டும் சிடி தர ஒசைக்காக இலக்க முறை குறிப்பு செயலாக்க சிப்புவையும் கொண்டிருக்கும். உருவ செயலாக்கம் தரவுச் சுருக்கம் மற்றும் குரல் ஏற்பு போன்றவையும் நெக்ஸ்ட் ஸ்டெப் ஜேபி இஜி மென்பொருள் மூலம் வண்ண கறுப்பு-வெள்ளை உருவங்களை சுருக்கலாம். ஆப்பிளின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஜாப்ஸ் 1985இல் நெக்ஸ்ட்டை உருவாக்கினார்.

next page button : அடுத்த பக்க பொத்தான்.

. nf : . என்எஃப் : ஒர் இணைய தள முகவரி நார்ஃபோல்க் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. nf. ca . . என்எஃப். சி. ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் நியூஃபவுண்ட்லாண்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. ng : என்ஜி : ஒர் இணைய தள முகவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. nh. us : . என்ஹெச். யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நியூ ஹேம்ப்ஸைர் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

. ni : . என்ஐ : ஒர் இணைய தள முகவரி நிகராகுவா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

nibble : கொறியளவு : தகை எண்மி : ஒர் எண்மியின் (byte) பாதி. இது அடுத்தடுத்து நான்கு துண்மிகளை (bits) க் கொண்டது.

NIC : நிக் : 1. பிணைய இடை முக அட்டை என்று பொருள்படும் network interface card என்பதன் சுருக்கம். 2. பிணையத் தகவல் மையம் என்று பொருள்