பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

asymmetric digital

100

asynchronous computer


ஒன்றில் 300 முதல் 450 துண்மிகள் (வினாடிக்கு) வரையும் இன்னொரு பாதையில் 9,600 துண்மிகள் அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

asymmetric digital subscriber line : செஞ்சீரிலா இலக்கமுறை சந்தாதாரர் தகவல் தடம் : சாதாரணமான முறுக்கிய இணை தொலை பேசிச் செப்புக் கம்பிகள் வழியாகவே ஒளிக் காட்சிச் சமிக்கை உட்பட மிகுவேக இலக்க முறைத் தகவல் தொடர்பைச் சாத்தியமாக்கும் வகையில் தொழில்நுட்பமும் சாதனங்களும் மேம்பட்டுள்ளன. இறங்கு திசையில் வினாடிக்கு மெகா துண்மி (மெகாபிட்)கள் வரையிலும், ஏறு திசையில் 800 கிலோ துண்மி (பிட்)கள் வரையிலும் தகவல் பரிமாற்றம் இயலும்.

asymmetric key cryptography : ஒழுங்கற்ற விசை, மறைக் குறியியல்.

asymmetric modem : ஒருங்கிலா இணக்கி (மோடெம்) : இருபுற தகவல் பரிமாற்றம் செய்யும் மோடெம். வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் தகவல்களை அனுப்பக் கூடியது. சான்றாக ஒப்புதல்கள் ஒரு திசையில் மெதுவாக அனுப்பப்படும். ஆனால் தகவல் அதிக வேகத்தில் வேறொரு திசையில் அனுப்பப்படும்.

asymmetric multiprocessing : ஒருங்கிலா பல்முனைச் செயலாக்கம் : ஒரு மையச் செயலகம் குறிப்பிட்ட பணிக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டுள்ள பல்முனை செயலாக்க வடிவமைப்பு.

asymmetric system : ஒழுங்கிலா முறைமை : பெரிய பாகங்கள் அல்லது தன்மைகள் வெவ்வேறாக உள்ள கணினி அமைப்பு. ஒளிக்காட்சி நெருக்குதலில், தகவல்களை நெருக்குவதற்கு அதிகக் கருவிகள் தேவைப்படுகின்ற அமைவு.

asynchronous : நேரச்சீரிலீ : ஒரு வகை தரவுத் தொடர்புடன் தொடர்புடையது. எழுத்துகள் அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே மாறுபடும் நேர இடைவெளி கொண்டது.

asynchronous communication : ஒத்தியங்காத் தகவல் தொடர்பு : நேரச் சீரற்ற தொடர்பு; ஒத்திசைவில்லாத தகவல் தொடர்பு.

asynchronous computer : நேரச் சீரற்ற கணினி : முன் செயல் நிறைவடைந்தால்