பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1012

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1011


nonreflective

தேவையான நடவடிக்கைகளைக் குறிப்பிடாமல் அவர் எதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்பதைக் குறித்துரைக்கிறது. எடுத்துக்காட்டு : சில பொறியமைவுகளில் பயனாளர் தேர்ந்தெடுத்த புலங்களில் வேண்டப்படும் மதிப்புகளின் அளவுகளை வெற்றுப் பதிவேடாக ஒரு காட்சித்திரையில் காட்டுதல்.

nonreflective : பிரதிபலிக்காத மை : ஒர் ஒளி எழுத்துப் படிப்பிக்குப் புலனாகக்கூடிய மையின் வண்ணம் எதுவும். இதனை, படிப்பு மை' என்றும் கூறுவர்.

non return to zero  : சுழி (பூஜ்யம்)க்குத் திரும்பாமை : காந்தப் பதிவுமுறை காந்த மயத்தில் துருவத்தை மாற்றுவதன் மூலம் இரும எண் 1-ஐ பதிவு செய்தல்.

nonsequential computer : வரிசை முறையிலாக் கணினி : ஒவ்வொரு அறிவுறுத்தத்தின் அமைவிடத்திற்கும் இயக்கப்படவேண்டிய கணினி.

nonservo robots : பணியிலா எந்திரன்கள் : நெகிழ்விலா தன்மையினால் கட்டுப்படுத்தப்படும் அமைப்பைக் கொண்ட எந்திரன்கள்.

1011

nonuniform memory

nonstop : நிற்காத : டான்டெம் நிறுவனம் உருவாக்கிய பிழை தாங்கும் கணினி அமைப்புகளின் குடும்பம்.

nonswitched line : விசையிலா இணைப்பு; நிலைமாறா இணைப்பு : இரு முனைகளிடையே நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பு இணைப்பு. இதனைக் குத்தகை இணைப்பு என்றும் கூறுவர்.

nonsystem disk : முறைமையிலா வட்டு : ஏற்றும் தரவு (அமைப்பு கோப்புகள்) கொண்டிராத ஒரு நெகிழ்வட்டு. அத்தகைய வட்டைக்கொண்டு கணினியை இயக்க முடியாது.

nontrivial : எளிதற்ற(து) . எளிதான முறையில் தீர்வு காண முடியாதது. மிகவும் கடினமான பிரச்சினைக்கு சிக்கலான நிரலாக்கச் செயல்முறை மூலம் தீர்வு காண்பதை எளிதற்ற தீர்வு முறை என்கிறோம்.

nonuniform memory architecture : ஒழுங்கிலா நினைவகக் கட்டுமானம் : சீக்குவென்ட் (Sequent) . இன் சீரிலா அணுகு நினைவகத்திற்காக வடிவமைக்கப்பட்ட முறைமைக் கட்டுமானம். ஒரு பகிர்வு நினைவக வகை. மையப்படுத்தப்பட்ட ஒற்றை