பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1013

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1012


nonvolatile memory

நினைவகச் சில்லாக இல்லாமல் பல பகிர்வு நினைவகத் துண்டங்களைக் கொண்டதாக இருக்கும்.

nonvolatile memory : அழியா நினைவகம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னும் அழியாமல் வைத்திருக்கும் சேமிப்புச் சாதனம். ரோம், இப்ரோம், ஃபிளாஷ் நினைவகம், குமிழ் நினைவகம் அல்லது மின் கலத்தினால் பாதுகாக்கப்படும் சீமாஸ் ரோம் போன்ற உள்ளக நினைவகத்தைக் குறிக்கும் சொல். சிலவேளைகளில் வட்டுகளைக் குறிப்பதும் உண்டு.

non volatile storage : அழியாவகை சேமிப்புச் சாதனம் : அழிவுறா சேமிப்பகம் : மின் விசை இல்லாதபோதும் தனது தரவுகளை இருத்தி வைத்துக் கொள்ளும் சேமிப்புச் சாதனம். காந்தக் குமிழ் நினைவகம். காந்த உள் மையச் சேமிப்புச் சாதனம் இந்த வகையின. இது அழியும் சேமிப்புச் சாதனத்திலிருந்து மாறுபட்டது.

No.oP (NOP) செயற்படா : செயலிலா : செயற்படாதிருத்தல் என்று பொருள்படும் no-Operation என்பதன் சுருக்கம். எடுத்துக்காட்டு : செயற்படா அறிவுறுத்தம்.

1012

normal distribution

no-operation instruction : செயற்படாநிரல் : நிரல் மேடைக்குச் சாதகமான விளைவை மட்டுமே உண்டாக்கக் கூடிய கணினி ஆணை இயல்பான வரிசைமுறையில் அடுத்த நிரலுக்குத் தானாக நகரும் வேலையை மட்டுமே இது செய்கிறது.

nop instruction : வினையிலா நிரல் : கணினி இயக்கத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தாத கணினி நிரல். ஆகவே இது 'நூப்' என்று அழைக்கப்படுகிறது.

NOR : எதிர் அல்லது : Not-or என்பதன் குறுக்கம். தருக்க முறை இயக்கியினால் இணைக்கப்பட்டுள்ள மாறிலிகள் இரண்டும் பொய்யானவையாக இருக்கும் போதுமட்டும் உண்மையின் ஒரு தருக்க முறை மதிப்பினை அளிக்கிற பூலியன் இயக்கி. இது, மற்றும், அல்லது ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கது.

Nor circuit : இல் அல்லது மின்சுற்று.

normal distribution : இயல்பான பகிர்வு நிரல் : ஒரு நடு மதிப்பினைச் சுற்றி ஒழுங்குமுறையாகத் தொகுக்கின்ற தன்மை