பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1016

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1015


notation 1015

NovaNet

உண்மையென்றால் அதன் 'எதிர் பொய்யானதாகும்.

notation : எண் அமைப்பு : குறிமானம் : எண்கள், சொற்றொடர்கள், சொற்கள் மற்றும் அளவுகள் எவ்வாறு எழுதப்படுகின்றன அல்லது எடுத்துரைக்கப்படுகின்றன என்பது. பதின்ம அல்லது இரும அமைப்பு போன்ற எண் அமைப்பில் எண்கள் அமையும் இடத்தைப் பொறுத்தே எண்களின் மதிப்பு முடிவு செய்யப்படும்.

notation base : தளக் குறிமானம்.

notation, binary coded decimal : இருமக் குறியீட்டுப் பதின்மக் குறிமானம்.

notation, octal : எண்மக் குறிமானம்.

notation, radix : அடிஎண் குறிமானம்.

not boolean : நாட் பூலியன் : ஒரு உள்ளீட்டைத் தலைகீழாக்கும் அளவை இயக்கம். உள்ளீடு '0' என்றால் வெளியீடு 1 ஆகும். இதுவே தலைகீழாகும்.

notebook computer : கையேட்டுக் கணினி : ஒரு கைப்பெட்டிக்குள் அடக்கிவிடக்கூடிய வடிவளவுடைய ஒரு கணினி. இதில் ஒரு தட்டையான தகட்டுத் திரவப் படிகக் காட்சித்திரை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கையடக்கக் கணினியைவிடப் பெரியது. ஆனால் ஒரு மேசைக் கணினியை விடச் சிறியது.

notelead : குறிதாள் அட்டை

notepad : நோட்பேடு : ஒர் உரைத் தொகுப்பான் மென் பொருள். விண்டோஸ் 95/ 98-இல் உள்ளது.

not gate : 'எதிர்' வாயில் : எதிராக்கம் செய்வதற்கான தருக்கமுறைச் செயற்பாட்டுக்கு இணையான மின்சுற்று வழி.

notis : நோட்டிஸ் : நார்வேயின் நார்ஸ்க் டேட்டா நிறுவனத்தின் அலுவலகத் தானியங்கித் தொகுப்பு. சொல் செயலாக்கம் மற்றும் விரிதாளுக்கு அப்பால் சென்று மின்னணு அஞ்சல் ஆவண சேமிப்பு வணிக வரை கலைகள் மற்றும் தொலையச்சு டெலக்ஸ் இடைமுகம் ஆகியவற்றை வழங்கக் கூடியது.

nova : நோவா : டேட்டா ஜெனரல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் கணினிகளுக்கான வடிவமைப்பு.

NovaNet : நோவாநெட் பிணையம் : இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் கல்வி ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் உருவாக்கிய