பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1022

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1021


number base

1021

numeral system

யில் ஒரு மதிப்பினைக் குறிக்கும் குறியீடு அல்லது குறியீடுகள். 2. இது ஒர் இலக்கத்தையும் குறிக்கும்.

number base : எண் ஆதாரம்.

number cruncher : எண் உழல் ; பெருங்கணிப்பி ; ஏராளமான கணிப்புகளையும் பிற எண்மானக் கணக்குகளையும் செய்வதற்கு வடிவமைக்கப்பட்ட செயல்முறை அல்லது கணினி.

number crunching : எண் நொறுக்கல்; எண் அரைத்தல் : ஏராளமான எண்வகைத் தரவுகளின் கணக்கீடுகளைக் குறிக்கிறது. மீண்டும் மீண்டும் செய்கிற கணக்கீடாக இருக்கலாம். கணிதமுறையில் மிகச் சிக்கலானதாக இருக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்ததாயிருக்கலாம். ஆனாலும் தரவு உள்ளிட்டு வெளியீட்டுச் செயல்பாடுகளை இது குறிப்பதில்லை. கணினியுள் நடைபெறும் அகநிலைச் செயலாக்கத்தையே குறிக்கிறது. எண்ணியல் துணைச் செயலிகள் இதுபோன்ற பணிகளை மேற்கொள்கின்றன. இதனால் கணினிகளின் செயல்திறன் பெருமளவு அதிகரிக்கப் படுகிறது.

number lock : எண் பூட்டு.

number generator : எண் இயற்றி.

number representation : எண்மானக் குறியீடு : ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறைகளுக்கிணங்க, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறியீடுகளில் எண்களைக் குறிப்பிடுதல்.

numbers, random : குறிப்பிலா எண்கள்.

number system : எண்மான முறை : எண்களைக் குறிப்பிடுவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள குறியீடுகளும், விதிமுறைகளும் எண்மான முறை எனப்படும்.

number system, binary : இரும எண் முறைமை.

numeral : எண்; எண்மானம் : ஒர் எண்ணைக் குறிப்பதற்கு மரபு முறைப்படி பயன்படுத்தப்படும் குறியீடு. 6, VI, 110 என்பவை ஒரே எண்ணை வேறுவேறு எண்மான முறைகளில் குறிக்கும் குறியீடுகள் ஆகும்.

numeralization : எண் முறையாக்கம் : அகர வரிசைத் தரவுகளை எண்களில் குறிப்பிடுதல்.

numeral system : எண் முறை : எண் அமைப்பு ; எண்மான