பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1024

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1023


Numeric Lock Key 1023 .nz

Numeric Lock Key : எண்பகுதி பூட்டு விசை : நிலைமாற்று விசை நிகழ்த்தும்போது (turned on) விசைப்பலகையிலுள்ள எண் பகுதியை செயல்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. அதன்பின் எண் விசைகளை ஒரு கணிப்பான் (Calculator) பாணியில் தரவு உள்ளீடு செய்யப் பயன்படுத்த முடியும்.

numeric pad : எண்பலகை : Glav முகப்புகள் கூட்டல் எந்திரங்கள் அல்லது விசை துளைப்பிகள் ஆகியவற்றில் உள்ள எண் விசைகளின் தொகுதி. ஒரு வரியிலோ அல்லது செவ்வகக் கட்டமாகவோ இல்லாமல் ஒரு குழு அமைப்பில் கொடுக்கப்பட்டிருப்பதால் எண் தரவுகளை மிகவும் திறமையாக உள்ளீடு செய்யலாம்.

numeric portion : எண்ணியல் பகுதி.

numeric type : எண்வகை .

numeric type field எண் வகைப் புலம்.

numeric type variables : எண்வகை மாறிகள்.

numeric variables : எண் மாறிலிகள்.

numeric width : எண்ணியல் அகற்சி.

numlock : எண் பூட்டு : விசைப் பலகையில் எண் அட்டையில் உள்ள ஒரு விசை. எண் அட்டையில் இலக்கங்களை தட்டச்சு செய்யும்போது மாற்று விசையை (Shift) அழைத்தும் தேவையின்றி இதை அழுத்தினால் போதுமானது.

numlock key எண்பூட்டு விசை.

.nyc.ny.us : என்ஒய்சி.என்ஒய்.யுஎஸ் ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்திலுள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ny.us : .என்ஒய்.யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.nz : என்இஸட் : ஒர் இணைய தள முகவரி நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.