பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1026

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

object deck

1025

object management


கான தர வரையறைகளை வளர்த்தெடுக்கவும் பொருள்நோக்கு தரவுத் தளங்களுக்கான இடைமுகங்களை வரையறுக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு.

object deck : இலக்கு அடுக்கு : இலக்குக் காட்டு : ஓர் ஆதார அடுக்குக்கு இணையான எந்திர மொழியினைக் குறிக்கின்ற துளையிட்ட அட்டை களின் தொகுதி.

object designator : இலக்கு நியமிப்பாளர்; பொருள் வடிவமைப்பாளர்.

object desk : பொருள்மேசை : எந்திர மொழியைக் குறிப்பிடும் துளையிட்ட அட்டைகளின் தொகுதி.ஆதார மேசைக்குச் சமமானது.

object file : இலக்குக் கோப்பு : எந்திரக் குறியீடு அல்லது செயல்படுத்தக்கூடிய கோப்புடன் இணைக்கப்படக்கூடிய குறியீட்டு வரிகள்.

objective-C : இயக்கு-சி : பீசிக் களிலும் பிரபல பணி நிலையங்களிலும் இயங்கும் ஸ்டெப்ஸ் டோன் கார்ப்பரேஷன் உருவாக்கிய நோக்கம் சார்ந்த சி-நிரல் தொடர் மொழி.சி மொழியின் முதல் வணிக நோக்கிலான பொருள் சார்ந்த விரிவாக்கம் இதுதான்.

objectives : இலக்குகள் : ஒரு அமைப்பு சாதிக்க வேண்டிய செயல் திட்டங்கள்.

object language (Target Language) : இலக்கு மொழி : ஒரு மொழிபெயர்ப்புச் செய்முறையின் வெளிப்பாடு.பொதுவாக, இலக்குமொழி என்பதும் எந்திரமொழி என்பதும் ஒன்றுதான்.இது "ஆதார மொழி" என்பதற்கு மாறுபட்டது.

object language programming : இலக்கு மொழிச் செயல்முறைப்படுத்துதல்;இலக்கு மொழிச் செயல்முறையாக்கம் : ஒரு குறிப்பிட்ட கணினியில் நிறைவேற்றப்படத்தக்க ஓர் எந்திர மொழியின் செயல்முறை வரைவு.

object machine : பொருள் எந்திரம் : குறிப்பிட்ட பொருள் நிரல் தொடரை திரும்பத் திரும்ப செய்யப் பயன்படுத்தப்படும் கணினி.

object management group : ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப்;பொருள் மேலாண்மைக் குழு : பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடு களுக்கான பொது தரவரையறைகளை இறுதி செய்கின்ற ஒரு பன்னாட்டு அமைப்பு.1989ஆம்


65