பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1029

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

object programme

1028

obsolescence


object programme : இலக்குச் செயல்முறை : கணினியில் இயங்குவதற்கு ஆயத்தமாக, கணினி யிலிருந்து அல்லது இணைப்பானிலிருந்து வெளிப் படும் நிரல்கள்.இதனை இலக்குக் குறியீடு என்றும் கூறுவர். இது ஆதாரச் செயல் முறைக்கு மாறுபட்டது.

object reference : பொருள் குறிப்பி : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஓர் ஆப்ஜெக்ட்டின் நினைவக இருப்பிடத்தை குறிக்கும் முகவரி.

object relational server : பொருள் உறவுநிலை வழங்கன் : இது ஒரு தரவுத்தள வழங்கன் கணினி.ஓர் உறவுநிலைத் தரவுத் தளத்திலுள்ள சிக்கலான தரவினங்களை பொருள் நோக்குமுறையில் மேலாண்மை செய்வதற்கு உகந்தது.

object resource : பொருள் வளம்.

object type : பொருள் வகை.

object type inheritance : பொருள் வகை மரபுரிமம்.

object vision : ஆப்ஜெக்ட் விஷன் : இலக்குப் பார்வை : விண்டோஸ் பயன்பாடுகளுக்காக போர்லேண்ட் நிறுவனம் உருவாக்கும் பயன்பாட்டு வளர்ச்சி அமைப்பு. பயனாளர் இடைமுக வடிவமைப்புக்காகவும் நிரல் தொடர் அளவைக் காகவும் ஒளிநுட்பத்தைப் பயன்படுத்துகிறது. விரிதாள்கள் மற்றும் தரவுத் தளங்களுக்கு இணைப்புகளை ஏற்படுத்தித்தருகிறது.

object windows : ஆப்ஜெக்ட் விண்டோஸ்; இலக்கச் சாளரம் : விண்டோஸ் பொருள்களின் வகுப்பு நூலகம்.போர்லேண்ட் நிறுவனம் உருவாக்கிய இது, விண்டோஸ் பயன்பாடுகளை உருவாக்க உதவுகிறது.போர்லேண்ட் மற்றும் நோக்க மேலாண்மைக் குழு உருவாக்கிய திறந்த தர நிருணயமுறை.

object wrapper : பொருள் மேலுறை : பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடுகளில் பேசப்படுவது.

oblique : சாய்வு : ஒரு ணினியில் அல்லது அச்சுப்பொறியில் உண்மையான சாய்வு எழுத்துரு (Italic Font) இல்லாத போது ஒரு ரோமன் எழுத்துருவைச் சற்றே சாய்த்து சாய்வு எழுத்துரு போல ஆக்கிக் கொள்கின்ற முறையை இவ்வாறு கூறுவர்.

obsolescenc : பயனற்றது;காலம் கடந்தது : வன்பொருள் அல்லது மென்பொருள்களை உரிய காலத்துக்கு முன்ன