பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1034

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

offline storage

1033

.ok.us


offline storage : மறைமுக சேமிப்பி;இணையா சேமிப்பகம் : மையச் செயலகத்தின் கட்டுப் பாட்டின்கீழ் இயங்காத சேமிப்பி.

offload : பளு இறக்கம் : இறக்குதல் : 1.ஒரு கணினியமைவின் பணிகளைச் சற்றுக்குறைந்த வேலைப் பளுவுள்ள மற்றொரு கணினிக்கு மாற்றுதல்.2.வெளிப்பாட்டுத் தரவுகளை ஒரு புறநிலைச் சாதனத்திற்கு மாற்றுதல்.

offpage connector : தொடர்பிலா பக்க இணைப்பி;மறுபக்க இணைப்பி;பக்க இணைப்பி : ஒரு தடவரிசை விளக்கப் படத்தில் ஒரு பக்கத்திலிருந்து மாறுபட்ட மற்றொரு பக்கத்திற்கு ஒரு தொடர் வரிசையை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஐங்கோணக் குறியீடு.

offset : எதிரீடு/குறை நிரப்பீடு;விலக்கம் : தேவைப்படும் மதிப்பு அல்லது நிலைமைக்கும், உள்ளபடியாக மதிப்பு அல்லது நிலைமைக்கும் இடையிலான வேறுபாடு.

off-the-shelf : ஆயத்தப் பொருள்கள்;உடன் பயன் பொருள்கள்;ஆயத்த விற்பனையாளர் களிடமிருந்து எளிதாகக் கிடைக்கக் கூடிய, மிகப் பெருமளவில் தயாரிக்கப்பட்ட கணினி வன்பொருள் அல்லது மென்பொருள்கள் பற்றியது.

ohm : ஓம் : மின்சாரத் தடையை அளப்பதற்கான அலகு.ஒரு மின் கடத்தியின் இருமுனை களுக்கிடையே 1 வோல்ட் மின்னழுத்தம் தரப்படும்போது அதன் வழியே பாயும் மின் னோட்டம் 1 ஆம்பியராக இருப்பின் அக்கடத்தி ஏற்படுத்தும் மின்தடை 1 ஓம்.

ohnosecond : ஓனோநொடி : தவறான நிரலைக் கொடுப்பதற்கும், அந்த நிரலினால் படுமோசமான விளைவுகள் ஏற்படும் என்று உணர்வதற்கும் இடையில் கழியும் நேரம்.மிகமிகக் குறைவான நேரம்.

.oh.us : .ஓச்.யுஎஸ் : ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டின் ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ok : சரி.

ok/cancel : சரி/விடு.

.ok.us : .ஒகே.யு.எஸ் : ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டின் ஒக்ல ஹாமா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.