பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1036

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.om

1035

on-board regulation


.om : .ஓம் : ஓர் இணையதள முகவரி ஓமன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக்களப் பெயர்.

ΟΜΑ : ஓஎம்ஏ : பொருள் மேலாண்மைக் கட்டுமானம் என்று பொருள்படும் Object Management Architecture archip தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பொருள் மேலாண்மைக் குழு (Object Management Group) உருவாக்கிய பொருள்நோக்கு பகிர்ந்தமை செயலாக்கத்திற்கான வரையறை.ஒஎம்ஏ, கோர்பா (CORBA - Common Object Request Broker Architecture) எனப்படும் பொதுப்பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானத்தையும் உள்ளடக்கியது.

omni directional : பல திசையியிலான : எல்லா திசைகளிலும் சான்றாக, பல திசையிலான வானலை வாங்கி (antenna) எல்லா திசைகளில் இருந்தும் சமிக்கை களை ஏற்றுக் கொள்ளும்.

omni page : ஆம்னி பேஜ் : கேயர் கார்ப்பரேஷ னிடமிருந்து பீசி மற்றும் மெக்கின்டோஷூக்காக உருவாக்கப்பட்ட எழுத்து உணர் மென்பொருள். சொற்பகுதியிலிருந்து வரைகலையைப் பிரித்துப் பார்க்கவும் பலவகையான அச்செழுத்துகளை சொற்பகுதியாக மாற்றித் தரவும் திறனுள்ள முதல் பீசி மென்பொருள்.

omr : ஓஎம்ஆர் : ஒளி வழிக்குறி உணர்விப்பி : optical mark reader என்பதன் குறும்பெயர்.

on-board : தன்னமைவு : "தரமான" கணினி மாதிரியின் ஒரு பகுதியாக ஒரு குறிப்பிட்ட வன் பொருள் சாதனத்தைச் சேர்ப்பதைக் குறிப்பிடுவது. சான்றாக." ஐபிஎம் ராம்-ஆன் போர்டு" என்றால் இந்த அளவு ராம் குறிப்பிட்ட மாடல் கணினியில் தரமானதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று பொருள். "ஆன்-போர்டு" என்ற சொல் ஒரு குறிப்பிட்ட மின் சுற்று தாய் அட்டையில் உள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது.

on-board computer : ஊர்திக் கணினி : விண்வெளிக்கலம், உந்து ஊர்தி, கப்பல், விமானம் போன்ற ஓர் ஊர்தியில் நிறுவப்பட்டுள்ள கணினி.

on-board regulation : பலகை ஒழுங்குமுறை; பலகைச் சீராக்கம் : ஒவ்வொரு பலகையிலும் தனி மின் வலியளவு ஒழுங்கியக்கியைக் கொண்டுள்ள அமைப்பு முறை.