பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1040

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

online processing

1039

open


சேய்மை முனையத்தில் பயன்படுத்துவோருக்கும் ஒரு மையக் கணினியமைவுக்கும் உள்ள ஒரு செயல்முறைக்குமிடையில் ஒரு பரிமாற்றம் அல்லது உரை யாடல் நடைபெறுகிறது.

online processing : உடன்நிகழ் செயலாக்கம்.

online service : உடன்நிகழ் பணி.

online state : நிகழ்நிலை நிலைமை : ஓர் இணக்கி (மோடம்) இன்னோர் இணக்கியுடன் தகவல்தொடர்பு மேற்கொண்டிருக்கும் நிலை.

online storage : நேரடிச் சேமிப்பகம் : மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சேமிப்பகம்.

online transaction processing : நிகழ்நிலை பரிமாற்றச் செயலாக்கம்.

on/off : நிகழ்/அகல்.

on screening promotting : திரையில் முறைப் படுத்தல்.

on-screen pasteup : திரையில் ஒட்டு : கணினி முகப்பின் அமைப்புப் படம்.

on state : தொகுப்பு நிலை.

ontime application : நேரடிப்பயன்பாடு.

on the fly : பறந்து கொண்டே : தேவைப்படும் போதெல்லாம் பெரும்பாலும் பயனாளர் தலை யிடா மல் பணி செய்வது.பணியினை முடிப்பதிலான செயல் திறனில் எந்தவித பின்னடைவும் இருக்காது என்பதை உணர்த்துவது.

on web page : வலைப்பக்கத்தில்.

OP : ஓபீ : operation code இயக்கம். "செயற்பாடு" என்று பொருள்படும் “operation" என்னும் ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர்.

opacity : ஒளிபுகாத் தன்மை : ஒரு காகிதப் பரப்பின் வழியே ஒளி ஊடுருவி அதில் உருக் காட்சி கடக்காத நிலை.

opcode : செய்பணிக் குறிமுறை.

Opel.John : ஓப்பல்.ஜான் : "பன்னாட்டு வணிக எந்திரக் கழகம்” (International Machines Corporation - IBM) என்ற அமைவனத்தை, 1981 இல் நுண் கணினி வணிக அமைவனமாக மாற்றி யவர்.இவருடைய தலைமையில், இந்த அமைவனம் "IBM சொந்தக் கணினி" (IBM personal computer) என்ற நுண்கணினியை உருவாக்கியது.

open : திறப்பு நிலை;தொடங்கு நிலை : ஒரு கோப்பில் அல்லது