பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1043

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

open standard

1042

operating ratio


open standard : திறந்தநிலைத் தர வரையறை : ஒரு வன்பொருள் சாதனம் அல்லது மென்பொருள் நிரலின் பண்புக்கூறுகளை விவரிக் கும் வரன் முறைகள்.பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கும் குறுக்குச் செயலாக்கத்தை அதாவது ஓர் இயக்கமுறைமையில் செயல்படுவது இன்னோர் இயக்கமுறைமையிலும் செய்யப்படுவதை (Interoperability) ஊக்குவித்து, புதிய தொழில் நுட்பங்களை வளர்த்தெடுக்க உதவவே, இந்தத் திறந்தநிலைத் தரவரையறைகள் வெளியிடப் பட்டன.

open subroutine : திறந்தநிலைத் துணை வாலாயம் : திறந்த துணை வழமை : ஒரு வாலாயத்தில் அது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு இடத்திலும் புகுத்தப்படும் துணை வாலாயம்.இது முடிவுற்ற வாலாயத்திலிருந்து (closed routine) வேறுபட்டது.

open system : திறந்த அமைப்பு : பல தரப்பட்ட பொருள்களுடன் இடையிணைக்கப்படுகின்ற வகையில் வடிவமைக்கப்படும் விற்பனையாளர் தொடர்பில்லாத அமைவு.ஒன்று அல்லது இரண்டு விற்பனையாளருக்காக அல்லாமல் ஆர்வமுள்ளவர் கள் ஒருமித்து தர நிருணயங்கள் உருவாக்கப் படுகின்றன.

'open system interconnection : திறந்தவெளி முறைமை இணைப்பு : திறந்த அமைப்பு இடைத்தொடுப்பி.

operand : இயக்கப்படும் எண்;செயப்படு பொருள்;செயலேற்பி : செயற்பாட்டுக்குள்ளாகும் தரவு அல்லது சாதன இனம்.இது, ஓர் கட்டளையில் ஒரு முகவர் மூலம் அடையாளங் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : ADD 100 to 400 என்பதில், "100", "400" இரண்டும் இயக்கப்படு எண்கள்.

operand addresses : இயக்கப்படு எண் முகவரிகள்.

operate : செய்முறையை இயக்கு : இயக்கு.

operating environment package : செயற்பாட்டுச் சூழ்நிலை இயக்கம் : இறுதிப் பயனாளர்கள் இயக்க அமைப்பு மற்றும் அவற்றின் பயன்பாட்டு நிரல் தொடர்களுக்கிடையில் வரைகலை சார்ந்த இடைமுகத்தை உருவாக்கும் மென்பொருள் பொதிவுகள் அல்லது பல் பணியாற்றும் திறனும் அளிக்கப்படும்.

operating ratio : இயங்கு நேரவிகிதம்.